ஜெனீவா: கொரோனாவுடனான போரில் இந்தியா உலகில் உள்ள பல நாடுகளுக்கு உதவி வழங்கி வருவதை உலக சுகாதார அமைப்பு (WHO) மிகவும் பாராட்டியுள்ளது. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi) WHO தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) பாராட்டியுள்ளார். கொரோனா தடுப்பூசியை உலகின் பல நாடுகளுக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கெப்ரேயஸ் செய்த ட்வீட்
இந்தியாவை பாராட்டி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ட்வீட் செய்துள்ளார். தடுப்பூசியை உலகிற்கு வழங்கி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றுபதிவிட்டுள்ளார். COVAX தொடர்பான உங்கள் பணிகளில் அர்ப்பணிப்பு மற்றும் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசி வழங்குவது என கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவி வருகிறீர்கள். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு அங்கு தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளும் உங்கள் முன்மாதிரியாக பின்பற்றும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Thanks & Prime Minister @narendramodi for supporting #VaccinEquity. Your commitment to #COVAX and sharing #COVID19 vaccine doses is helping 60+ countries start vaccinating their #healthworkers and other priority groups. I hope other countries will follow your example.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) February 25, 2021
இந்தியா பல நாடுகளுக்கு உதவி வருகிறது
இந்தியா இதுவரை பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் (Corona Vaccine) போடப்பட்டு வருகின்றன. கோவாக்சின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உருவாக்கியுள்ளது. கோவிஷீல்ட்டை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா உருவாக்கியுள்ளது. சீரம் நிறுவனம் இதை இந்தியாவில் தயாரிக்கிறது.
வேறுபாடுகளை மறந்து பாரபட்சமில்லாமல் உதவும் இந்தியா
முன்னதாக, கொரோனோ வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியது. நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பரஸ்பர கருத்து வேறுபாடுகளை மறந்து கடினமான காலங்களில் இந்தியா அனைவருக்கும் உதவி வருகிறது. சீனாவின் உத்தரவின் பேரில் எல்லைப் பிரச்சினையைத் தூண்டிய நேபாளத்திற்கும் இந்த தடுப்பூசியை புதுடெல்லி வழங்கியுள்ளது. இது தவிர, விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள கனடாவிற்கும் உதவியையும் இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
ALSO READ | தற்சார்பு பாரதம்: சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதியில் பெரும் சரிவு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR