Side Effects of Vitamin E Overdose: வைட்டமின்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான கூறுகளாக பார்க்கப்படுகின்றன. எனினும், அவற்றின் தேவை, வயது, ஆரோக்கியம் மற்றும் பாலினத்தைப் பொறுத்து மாறுபடும். அனைத்து வைட்டமின்களும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். அனைத்து வகையான வைட்டமின்களுக்கும் பிரத்யேக பயன்பாடுகள் உள்ளன.
மற்ற வைட்டமின்களைப் போலவே, வைட்டமின் ஈ -யும் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது இரத்தக் கட்டிகளைத் தடுப்பதிலும், செல்களை ஆக்ஸிடேடிவ் சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஈ சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கிறது. அதன் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் காரணமாக இது சரும சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ விதைகள், கொட்டைகள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது. இருப்பினும், எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு. அது போல, இதையும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். உடலில் இது அளவோடு இருந்தால்தான் நன்மை பயக்கும். அதிகப்படியான வைட்டமின் ஈ உடலுக்கு ஆபத்தானது.
வைட்டமின் ஈ அதிகமாக உட்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன?
வைட்டமின் ஈ நுரையீரல் செயல்பாடு, மன ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் வலியைப் போக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், பாதாம், சூரியகாந்தி விதைகள், பசலைக்கீரை, கிவி, தக்காளி போன்ற இயற்கை மூலங்களிலிருந்து இந்த ஊட்டச்சத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். மருத்துவர்கள் அல்லது நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் வைட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவற்றை அதிகப்படியாக உட்கொண்டால், உடலில் நச்சுத்தன்மை (Vitamin E Toxicity) உண்டாகும்.
வைட்டமின் ஈ நச்சுத்தன்மை என்றால் என்ன?
வைட்டமின் ஈ கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். இது கல்லீரல் மற்றும் கொழுப்பு நிறைந்த திசுக்களில் நீண்ட நேரம் சேமிக்கப்படுகிறது. உடலில் அதிக அளவில் வைட்டமின் ஈ சேர்ந்தால், உடலுக்கு அதை வெளியேற்றுவதை கடினமாகிவிடும். உடலில் வைட்டமின் ஈ அதிகமானால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. அதாவது உடலில் ஒரு நாளைக்கு 1,100 மி.கி.க்கு மேல் வைட்டமின் ஈ சேர்ந்தால், குமட்டல், சோர்வு முதல் மூளை பக்கவாதம், இரத்தப்போக்கு மற்றும் தசை பலவீனம் வரையிலான அறிகுறிகள் ஏற்படுகின்றன.
வைட்டமின் ஈ நச்சுத்தன்மை அதன் சப்ளிமெண்ட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும். வைட்டமின் ஈ நிறைந்த இயற்கை உணவுகளில் பொதுவாக அதிகப்படியான வைட்டமின் ஈ இருக்காது. ஏற்கனவே இரத்த உறைவு எதிர்ப்பு மருந்துகள் அல்லது ஏண்டி-பிளேட்லெட் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு வைட்டமின் E நச்சுத்தன்மை தீவிரமாக இருக்கலாம்.
வைட்டமின் ஈ அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன?
- அதிக அளவு வைட்டமின் ஈ இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் மண்டையோட்டுக்குள் இரத்தப்போக்கு போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- வைட்டமின் ஈ -ஐ அதிகமாக உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சி செய்யப்படவில்லை.
- வைட்டமின் E அதிகமாக உட்கொள்வது குமட்டல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- அதிகப்படியான வைட்டமின் ஈ பக்கவாதம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த 7 காலை பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ