கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்: விபத்தில் பறிபோன இரட்டை உயிர்.. பாதியில் நிற்கும் துளசி கல்யாணம்

Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். நேற்றைய எபிசோடில் ஸ்ரீகாந்தை வந்த கார் லாரி மோதி பிறகு வெற்றி ஓட்டி வந்த கார் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2025, 01:04 PM IST
  • கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ஹாஸ்பிடலில் அட்மிட்.
  • ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் ராஜேஸ்வரி.
கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்: விபத்தில் பறிபோன இரட்டை உயிர்.. பாதியில் நிற்கும் துளசி கல்யாணம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டிமேளம்’ சீரியல்.

கெட்டிமேளம்: இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீகாந்தை வந்த கார் லாரி மோதி பிறகு வெற்றி ஓட்டி வந்த கார் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகின்றனர். வெற்றி அவர்களை பார்த்து விட்டு வருவதாக சொல்ல அவனது அப்பா எல்லாவற்றையும் நம்ம பசங்க பார்த்துப்பாங்க, நாமினேஷன் பண்ணணும் நீ வா என்று அழைத்து சென்று விடுகிறார். 

இருந்தாலும் வெற்றி தனது நண்பனுக்கு போன் செய்து அவர்களை எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள் என்று விசாரித்து வை என்று சொல்கிறான். ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் ராஜேஸ்வரி துளசியிடம் நீ தான் தியாவை பார்த்துக்கணும் என்று சத்தியம் வாங்கி உயிரை விடுகிறாள். 

அடுத்து வெற்றி இவர்களை பார்க்க ஹாஸ்பிடல் வருகிறான், அப்போது நர்ஸ் ஒருவர் B நெகட்டிவ் ரத்தம் தேவை. யாரவது அந்த ப்ளட் குரூப் இருக்கீங்களா என்று கேட்க வெற்றி ரத்தம் கொடுக்கிறான். அடுத்து சிவராமன் மூத்த மகன் ரகுராமனுக்கு போன் போட்டு எல்லாருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடு என்று சொல்கிறார். 

ஆனால் ரகுராம் எல்லாருக்கும் பாதி பணத்தை கொடுத்து மீதி பணத்தை ஆட்டைய போடுகிறான். வெற்றி ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வர டாக்டர் விபத்தில் சிக்கிய மூணு பேரும் நல்லபடியா இருக்காங்க. அவங்களுக்கு சின் காயம் தான். பர்ஸ்ட் எயிட் செய்து அனுப்பியாச்சு என்று சொல்ல வெற்றி நிம்மதி அடைகிறான். 

ஆனால் இங்கே ஸ்ரீகாந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஷாக் கொடுக்கிறார் டாக்டர். இதனால் ஸ்ரீகாந்தின் தங்கச்சி மோனிகா எல்லாத்துக்கும் உன் ஜாதகம் தான் காரணம் என துளசி மீது பழி சுமத்துகிறாள். குழந்தைக்கு ப்ளட் கிடைத்தால் தியா பிழைத்து விட்டதாக டாக்டர் சொல்கிறார். தியா துளசி அம்மா கூட தான் செல்வேன் என்று அடம் பிடிக்க மோனிகா அடிக்க கை ஓங்குகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: பக்கத்தில் விஷ்ணு, வெக்கத்தில் சௌந்தர்யா! ப்ரப்போஸ் செய்த ப்ரமோ வைரல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News