Budget 2025, Old Tax Regime vs New Tax Regime: முக்கிய மாற்றங்கள்.... எந்த வரி முறை அதிக பலனளிக்கும்?

Union Budget 2025: இந்த பட்ஜெட் மீது மக்கள் பல வித நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். குறிப்பாக வரி செலுத்துவோர் அதிக விலக்குகளை எதிர்பார்க்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 28, 2025, 10:58 AM IST
  • ஒருவரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் என வைத்துக்கொள்வோம்.
  • அவர் இரண்டு வருமான வரி முறைகளுக்கு இடையே எதை தேர்ந்தெடுக்க வேண்டும்?
  • எதில் அவர் அதிகபட்ச வரியைச் சேமிக்க முடியும்?
Budget 2025, Old Tax Regime vs New Tax Regime: முக்கிய மாற்றங்கள்.... எந்த வரி முறை அதிக பலனளிக்கும்? title=

Union Budget 2025: நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதில் வருமான வரி செலுத்துவோருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பட்ஜெட் மீது மக்கள் பல வித நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். குறிப்பாக வரி செலுத்துவோர் அதிக விலக்குகளை எதிர்பார்க்கிறார்கள். வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? வரி முறையில் மாற்றம் ஏற்படுமா? இந்த விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

- முதலாவதாக இந்த முறை வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக அதிகரிக்கலாம். அதாவது ரூ.4 லட்சம் வரை வருமான வரி பூஜ்ஜியமாக இருக்கலாம். 

- இது தவிர, அரசாங்கம் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், அதாவது நிலையான விலக்கையும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. 

- மூன்றாவதாக, வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 80D இன் கீழ் சுகாதாரக் காப்பீட்டுக்கான விலக்கை அரசாங்கம் ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கலாம். இந்தப் பிரிவின் கீழ், வயதான பெற்றோருக்கான சுகாதாரக் காப்பீட்டில் வரி விலக்கு ரூ.50,000 ஆகும். இரண்டையும் இணைத்து,  வரி செலுத்துவோர் வருமான வரி பிரிவு 80D இன் கீழ் ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம். 

- இவை நடந்தால், சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும்.

Tax Slabs: வரி அடுக்குகளில் மாற்றம்

ரூ.4-8 லட்சம் வரையிலான வருமான அளவு 5 சதவீத வரி அடுக்கில் சேர்க்கப்படும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த முறை வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் வரி அடுக்குகளில் நிவாரணம் வழங்கும் அதிக சாத்தியங்கள் உள்ளன. மேலும், இந்த முறை அரசாங்கம் பழைய வரி முறையை நிறுத்திவிட்டு ஒற்றை வரி முறையை கொண்டு வரும் சாத்தியக்கூறுகளும் உள்ளதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

Taxpayers: புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.7.70 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு

2024-25 மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையில், ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கான வரி பூஜ்ஜியமாக்கப்பட்டது. பழைய வரி முறையில், அரசாங்கம் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கிறது. இது தவிர, இதில் பல வகையான வரி விலக்கு விருப்பங்களும் உள்ளன. இவற்றில் முதலீடு செய்வதால் வரி செலுத்துவோர் வருமான வரியைச் சேமிக்க முடியும். இருப்பினும், புதிய வரி முறையில் அத்தகைய விருப்பங்கள் எதுவும் இல்லை. மத்திய அரசு ஏப்ரல் 1, 2020 முதல் இரண்டு வரி முறைகளுக்கான விருப்பத்தை வழங்கத் தொடங்கியது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்பு ஒரே ஒரு வரி விதிப்பு முறை மட்டுமே இருந்தது.

Old Tax Regime vs New Tax Regime: பழைய வரி முறை vs புதிய வரி முறை

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் என வைத்துக்கொள்வோம். அவர் இரண்டு வருமான வரி முறைகளுக்கு இடையே எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளார். அவர் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்? எதில் அவர் அதிகபட்ச வரியைச் சேமிக்க முடியும்? பின்வரும் கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

New Tax Regime: புதிய வரி முறையின் கீழ் கணக்கீடு (வருமானம்: ஆண்டுக்கு 10 லட்சம்)

- புதிய வரி முறையில், ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 0 (ரூ.7 லட்சம் சேமிக்கப்பட்டது).
- வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 87A இன் கீழ் அரசாங்கம் ரூ.25,000 வரிச் சலுகையை வழங்குகிறது.
- புதிய வரி முறையில் ரூ.7 லட்சம் வரையிலான சம்பளத்திற்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது. இந்த நபருக்கு அது இங்கே கிடைக்காது.
- இது தவிர, சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.75,000 வரை நிலையான விலக்கு கிடைக்கும்.
- இந்த நபருக்கு இந்தக் கழிப்பு கிடைக்கும். அதன் மூலம், அவரது சம்பளம் 10000-75,000 = 9 லட்சத்து 25 ஆயிரம் என்று கணக்கிடப்படும்.
- இப்போது ரூ.7 லட்சத்து 1 ஆயிரம் முதல் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் வரை 10% வரி விதிக்கப்படும்.
- இதில், மீதமுள்ள ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்திற்கு அவர் ரூ.22,500 வருமான வரி செலுத்த வேண்டும்.
- அதாவது, புதிய வரி விதிப்புமுறையின் கீழ், அவர் தனது ஆண்டு சம்பளமான ரூ.10 லட்சத்திற்கு ரூ.22,500 வருமான வரி செலுத்த வேண்டும்.

Old Tax Regime: பழைய வரி முறையின் கீழ் கணக்கீடு (வருமானம்: ஆண்டுக்கு 10 லட்சம்)

- அவரது சம்பளத்தில் ரூ.2.5 லட்சம் வரை வரி 0.
- பழைய வரி முறையில், பிரிவு 87A இன் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான சம்பளத்திற்கு ரூ.12,500 வரிச் சலுகை கிடைக்கிறது.
- அவரது சம்பளம் ரூ.10 லட்சம் என்பதால் அவருக்கு இது கிடைக்காது. 
- இருப்பினும், இங்கு ரூ.50,000 நிலையான விலக்கு கிடைக்கும்.
- அதன் அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.9.50 லட்சமாகக் கணக்கிடப்படுகிறது.
- 2.5 லட்சம் 1 ரூபாய் முதல் ரூ.3 லட்சம் வரை, 5% அதாவது ரூ.2,500 வருமான வரி.
- 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5% அதாவது 10,000 ரூபாய் வருமான வரி.
- 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20% வருமான வரியும், 4.50 லட்சம் வரை 20% (ரூ. 90,000) வருமான வரியும் செலுத்த வேண்டும்.
- பழைய வரி முறையில், அவர் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
- இருப்பினும், அவர் HRA, LTA இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
- 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சேமிப்பு கிடைக்கும்.
- மேகும், 80D இன் கீழ் ரூ.75,000 வரை வரி விலக்கு பெறலாம்.
- இது தவிர, 80CCD(1B), 80 D, 24(b), பிரிவு 80E ஆகியவற்றின் விதிகளின் கீழ் முதலீடு செய்து க்ளெய்ம் செய்தால் அவரது முழு வரியையும் பூஜ்ஜியமாகக் குறைக்கலாம்.

Standard Deduction: நிலையான விலக்கு வரம்பு

கடந்த பட்ஜெட்டில், புதிய வரி முறையில் நிலையான விலக்கு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பழைய வரி முறையில் இது வெறும் ரூ.50,000 ஆக உள்ளது. வரும் பட்ஜெட்டில், அரசாங்கம் புதிய வரி முறையில் நிலையான விலக்கு வரம்பை ரூ.1 லட்சமாக அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 

Tax Rebate: வரிச்சலுகை

வருமான வரியின் பிரிவு 87A இன் கீழ் வரிச் சலுகையைப் பற்றிப் பேசுகையில், புதிய வரி முறையில், ரூ.7 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.25,000 வரை வரிச் சலுகை கிடைக்கிறது. சம்பளம் ரூ.7 லட்சத்து 1 ரூபாயை எட்டியவுடன், இந்த தள்ளுபடி கிடைக்காது. பழைய வரி முறையில், ரூ.5 லட்சம் வரையிலான சம்பளத்திற்கு ரூ.12,500 வரிச் சலுகை கிடைக்கிறது. சம்பளம் ரூ. 5 லட்சத்து 1 ரூபாயை எட்டியவுடன், இந்த தள்ளுபடி கிடைக்காது.

மேலும் படிக்க | EPFO 3.0 விதிகள்: 7 கோடி+ EPF உறுப்பினர்களுக்கு இனி பல வேலைகள் எளிதாகும்.. முழு விபரம் இதோ

மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு நல்ல செய்தி... பட்ஜெட்டில் வருகிறது பெரிய சர்ஃப்ரைஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News