ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: "ஆதாரம் காட்டினால் நிலத்தை இலவசமாக தருகிறோம்".. விஜய்க்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் பதில்!

ஆதாரம் காட்டினால் நிலத்தை இலவசமாக மாற்றிக்கொடுப்பதாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தவெக விஜய்க்கு சவால் விடுத்துள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Jan 28, 2025, 12:29 PM IST
  • பரந்தூரில் நிலம் கையப்படுத்துதலில் ஜி ஸ்கொயருக்கு தொடர் உள்ளது
  • தவெக சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது
  • இதற்கு மறுப்பு தெரிவித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது
ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: "ஆதாரம் காட்டினால் நிலத்தை இலவசமாக தருகிறோம்".. விஜய்க்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் பதில்!  title=

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தவெக கட்சி தலைவர் விஜய்யும் பரந்தூர் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி நமது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'விவாத மன்றம்' நிகழ்ச்சியில் தவெக-வின் செய்தித் தொடர்பாளர் ஜெகதீசன் ஜி ஸ்கொயருக்கு பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் எக்ஸ் பதிவின் மூலம் பதில் தெரிவித்துள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் எங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எந்த நிலமோ சொத்தோ இல்லை என்ற அறிக்கை. 

எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும். 

மேலும் படிங்க: தினமும் வால்நட்ஸ் சாப்பிடுங்க.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி!

இதுபோன்ற தவறான தகவல்களை எதிரிகள் தொடர்ந்து பரப்புவதால் அன்புக்குரிய தமிழக வெற்றிக் கழக முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம். பண்ணூர் கிராமத்தில் மொத்தமே 800 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. 

பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் கிராமங்களில் 1 முதல் 440 வரை சர்வே எண்கள் உள்ளன. இந்த சர்வே எண்களில் பதிந்துள்ள நில உரிமையாளர்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடு மற்றும் சர்வே போர்டலில் பார்க்க முடியும். மேலும் 2006 முதல் 2011 வரை இந்த மூன்று கிராமங்களிலும் அநேக நிலங்களின் பதிவுகள் நடந்து முடிந்து விட்டன. ஆனால் ஜி எஸ்கொயர் நிறுவனமோ 2012ல் தான் தொடங்கபட்டது. 

அப்படி இருக்கும் பட்சத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் அங்கு நிலங்களை கையகப்படுத்தி உள்ளது என்ற வாதம் உண்மையற்றது. 20.01.2025 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "விவாத மன்றம்" நிகழ்ச்சியில் பகிர்ந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு. ஜெகதீசள் பதிவு மொத்தமாக நிகழ்ச்சி நடந்த 43 நிமிடங்களில் சரியாக 21:00 முதல் 23:00 நிமிடத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளதாக தவறாக உங்களால் தெரிவிக்கப்பட்டது. 

ஜி ஸ்கொயர் விளக்கம் 

"பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை" இதற்குப் பிறகும் பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் எங்கள் ஜி ஸ்கொயர் பெயரிலோ அல்லது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவரின் பெயரிலோ உள்ளதாகத் உண்மையான தகவல் அளித்தால், அந்த நிலத்தை நீங்கள் அடையாளம் காட்டும் நபருக்கு இலவசமாக மாற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது. 

மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: "என் கல்யாணமே நின்றுவிட்டது".. கதறும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News