உலகத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவை உணவு. உணவு இல்லையென்றால் உயிர் வாழமுடியாது. அசைவ உணவு, சைவ உணவு என்று உணவில் இரு பிரிவுகள் மட்டுமே உண்டு.
சைவ உணவை விட அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் உலகில் அதிகம் என்று கூறப்படுகிறது. அசைவ உணவில் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் ஆரோக்கியமானது, நிறைய சத்துகள் கொண்டது என்று கூறப்படுகிறது.
மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி என பலவிதமான கடல் வாழ் உயிரினங்களை மனிதர்கள் விரும்பி உண்கின்றனர். அதுமட்டுமல்ல, கடல் புல்லு போன்ற கடல் தாவர இனங்களும் மனிதர்களால் உண்ணப்படுகின்றன. பொதுவாகக் கடல் உணவு மற்றைய அசைவ உணவுகளை விடச் சிறந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவானதாகவும் உள்ளது.
Read Also | Health Tips: வயிற்று வலி, அஜீரண கோளாறுகளுக்கு அருமருந்து கொத்தமல்லி
மீன் மற்றும் பிற கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் சத்தானதாகவும் இருக்கும். பொதுவாக ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அயோடின் குறைபாடு மக்களிடையே பெருமளவில் காணப்படுகிறது. இந்த இரண்டு சத்துக்களும் கடல் உணவில் அதிகம் உள்ளது. எனவே தான், மருத்துவர்கள் கூட மீன், இறால் போன்ற உணவுகளை பரிந்துரைக்கின்றனர்.
கடல் உணவை, அதிலும் குறிப்பாக மீன் உண்பவர்களின் ஆயுள் அதிகமாக இருக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதய நோய், மனச்சோர்வு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பப்டும் வாய்ப்பும் குறைவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, மீன் வகைகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு இளமை நீண்ட காலம் நீடிக்கும்!
சத்தான மீன்களின் சில வகைகள்: சால்மன்
சால்மன் (Salmon) என்பது ஒரு வகை எண்ணெய் மீன் ஆகும், வாய்க்கு ருசியான சால்மனில் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு காணப்படுகிறது. இதில் வைட்டமின் டி சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது சால்மன்.
Read Also | Healthcare: கோவிட்டால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
மத்தி (Sardines)
மத்தி மீன் பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மத்தி மீன், மிகவும் பிரபலமான கடல் உணவு என்ற பெயரைப் பெறுகிறது.
Shellfish வகை கடல் உயிரினங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை என்பதோடு, அதன் இறைச்சி அடர்த்தியாக இருப்பதால், மற்ற இறைச்சிகளைப் போலவே இருக்கும். Shellfish வகை மீன்களில், clams, mollusks, oysters என பல மிகவும் பிரபலமானவை.
இறால் (Shrimp)
இறால் என்பது நண்டுகள் மற்றும் நண்டுகள் தொடர்பான ஒரு வகை ஓட்டுமீனாகும். இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள்குறைவாக இருக்கும், ஆனால் புரதச்சத்து அதிகம் கொண்டது. இது செலினியம் (selenium) மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது இறால்.
ட்ரெள ட் (Trout)
சால்மன் போன்ற சுவையான நன்னீர் மீன்களில் ட்ரவுட் மீனும் பிரபலமானது, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மற்றொரு வகை.
டுனா (Tuna)
டுனா மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. புரதச்சத்து அதிகமாக இருக்கும் டுனாவி, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும். அதிக புரதத்தை சேர்க்க வேண்டிய ஆனால் கலோரிகளை குறைவாக வைத்திருக்க வேண்டியவர்களுக்கு மிகவும் ஏற்றது டுனா.
Read Also | Milk Tips: ஆட்டுப்பால், மாட்டுப்பால் தெரியும் அது என்ன லேப் பால்? சைவப் பால்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR