Weight Loss Journey: உடல் பருமன் இந்த காலகட்டத்தின் மிகப்பெரிய உடல்நலப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நீண்ட நேரம் அமர்ந்திருந்தே வேலைப்பார்ப்பது, போதுமான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவை உடல் பருமன் பிரச்னையை அதிகமாக்குகின்றன.
அந்த வகையில், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும், அதிகரித்த உடல் எடையை குறைக்கவும் மக்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவுப்பழக்கம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே உடல் எடையை குறைக்க முக்கியமான ஒன்றாகும். அப்படியிருக்க, உடல் பருமன் பிரச்னையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான 24 வயது பெண் ஒருவர் தனது தொடர்ச்சியான செயல்பாட்டால் 6 மாதங்களில் 30 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
Weight Loss Journey: சோனியா 30 கிலோவை குறைத்தது எப்படி?
சோனியா என்ற அந்த பெண் தனது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். சோனியா உணவுப்பழக்கவழக்கத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்தும், உடற்பயிற்சிகள் குறித்தும் வீடியோக்களாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பாரம்பரியமான இந்திய உணவுகளை உட்கொண்டு, குறைவான கலோரிகளை எடுத்துகொண்ட அதிக உடல் எடையை குறைத்ததாக அவர் கூறுகிறார்.
மேலும் படிக்க | வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! டாக்டர் ஷர்மிகா சொன்ன டிப்ஸ்..
Weight Loss Journey: சோனியாவின் உணவுமுறை எப்படி இருந்தது?
சோனியாவின் ஒரு பிரபலமான வீடியோவில், அவரது உணவை உட்கொள்வதற்கு முன் செய்யும் வழிமுறைகளை குறித்து குறிப்பிட்டிருந்தார். சாப்பிடுவதற்கு முன் எப்போதும் 2 கிளாஸ் தண்ணீரை குடிப்பாராம். மேலும் குறைவான உணவை மட்டுமே உட்கொள்வாராம்.
அவரது சாப்பாட்டில் பாதியளவு பச்சை காய்கறிகள், சாலட் ஆகியவையும், கால் பகுதி புரதம் நிறைந்த கொண்டக்கடலை, பருப்பு அல்லது சோயாபீன்ஸ் ஆகியவை இருக்குமாம். மீது கால் பகுதி ஆரோக்கிய கொழுப்புகளை கொண்ட நெய், கார்ப்போஹேட்ரேட் கொண்ட சாதம் அல்லது ரொட்டி இருக்குமாம்.
Weight Loss Journey: சோனியாவின் அன்றாட பழக்கவழக்கங்கள்
மேலும் அவரது அன்றாட நடவடிக்கை குறித்து மற்றொரு வீடியோவில் அவர் பகிர்ந்திருந்தார். அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தில் இது முக்கியமானதாகும். காலையில் 5 மணிக்கு எழுந்து, உடலை நீரேற்றமாக வைத்திருந்து, ஓட்டப்பயிற்சியை மேற்கொள்வாராம்.
உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, வயிறு நிரம்பிய சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்கும் உணவை எடுத்துக்கொள்வாராம். தினமும் 3-4 லிட்டர் தண்ணீரை அருந்துவாராம். மேலும் மாலையில், முழு உடலுக்கான கார்டியோ உடற்பயிற்சியை வீட்டிலேயே மேற்கொள்வாராம். இரவு உணவில் சூப், சிக்கன் மார்பு பகுதி, பன்னீர், முட்டை ஆகியவற்றுடன் சால்டை சாப்பிடுவாராம். இரவு உணவுக்கு பின் நடைப்பயிற்சியும் மேற்கொள்வாராம்.
Weight Loss Journey: பாலோயர்களுக்கு சோனியா அறிவுரை
இவை மட்டுமின்றி, தனது வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களை செய்து, துரித உணவுகளை முற்றிலும் தவிர்த்து தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை குறைப்பை மேற்கொண்டுள்ளார். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அதனை தள்ளிப்போடாமல் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சோனியாவின் தனிப்பட்ட கருத்துகள் ஆகும். இவற்றை பின்பற்றும் முன் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ