சட்டுபுட்டுனு எடை குறைய இந்த மேஜிக் பானம் உதவும்: எலுமிச்சை சாறுடன் 'இதை' சேருங்க

Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2023, 04:07 PM IST
  • அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்த சிலர் ஜிம் செல்கிறார்கள்.
  • சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.
  • ஆனால், இவற்றால் பல நேரங்களில் பெரிய விளைவுகள் எதையும் காண முடிவதில்லை.
சட்டுபுட்டுனு எடை குறைய இந்த மேஜிக் பானம் உதவும்: எலுமிச்சை சாறுடன் 'இதை' சேருங்க title=

Weight Loss Tips: சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், பலர் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பலர் பல மணிநேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். பசி எடுத்தால், பெரும்பாலும் நொறுக்குத் தீனிகள் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்கிறார்கள். இதன் காரணமாக எடை அதிகரித்து வயிறு பெரிதாகத் தொடங்குகிறது. அதிக எடை காரணமாக, மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமனால் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் வாழ்க்கை முறையின் இடையூறுகளால் மட்டுமே நிகழ்கின்றன. சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை பின்பற்றாததால், உடல் பருமன் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால், ஆரம்பத்திலேயே சில ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுத்தால், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் எடையைக் கட்டுப்படுத்தலாம். 

அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்த சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றால் பல நேரங்களில் பெரிய விளைவுகள் எதையும் காண முடிவதில்லை. சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் பருமனை குறைக்கும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு ஓமம் மற்றும் சீரக நீர்

அதிகரிக்கும் எடையைக் குறைக்க ஓம (Celery) தண்ணீரைப் பயன்படுத்தலாம். ஓம தண்ணீர் மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், ஓமத்துடன் சீரகத்தை கலந்து தண்ணீரை தயாரித்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓமம் மற்றும் சீரகத்தை (Cumin Seeds) ஒன்றாக கலந்து தண்ணீர் தயாரித்து அதை குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அரை டீஸ்பூன் ஓமம் மற்றும் அரை டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து இரவில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நீராக குடிக்கவும். ஓமம்-சீரக நீர் உடலில் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதன் குணங்கள் எடையை குறைக்க (Weight Loss) பெரிதும் உதவுகின்றன. 

மேலும் படிக்க | மனச்சோர்வை விரட்டியடிக்கும் உணவுகள்! குளிர்காலத்திற்கு அவசியமான டயட் சார்ட்

ஓம தண்ணீரில் எலுமிச்சம்பழம் (Lemon Water) கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். தொப்பையை குறைக்க, காலையில் எலுமிச்சை கலந்த ஓம தண்ணீரை குடிக்கவும். இதைச் செய்ய, நீங்கள் 1 டீஸ்பூன் ஓமத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஓம நீரை வடிகட்டி அரை எலுமிச்சை சாறு தண்ணீரில் கலந்து குடிக்கவும். ஓம நீரை கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த இந்த ஓமம்-எலுமிச்சை பானம் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, எடையைக் குறைக்க உதவுகிறது.

ஓமத்தின் நன்மைகள்

- ஓமத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
- ஓம நீர் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- ஓம நீர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
- ஓம தண்ணீர் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது.
- செரிமான பிரச்சனைகளால் ஏற்படும் வயிற்று வலிக்கு ஓம நீர் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கழிவறை காட்டிக் கொடுக்கும் கல்லீரல் பாதிப்புகள்! மலம் காட்டும் அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News