Sexually transmitted infection Prevention | இளம் வயதினர் மத்தியில் பால்வினை தொற்றுகள் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. ஆனால், இது குறித்து அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பால்வினை தொற்றுகள் உயிருக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். உடலுறவு மூலம் பரவக்கூடிய அந்த தொற்றுகள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், பாதுகாப்பான உடலுறவு, பாதுகாப்பற்ற உடலுறவு குறித்து அறிந்து கொள்வது அடிப்படை அறிவும் கூட.
அந்தவகையில் பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை பயன்படுத்தலாம். ஏனென்றால் ஆணுறை என்பது செக்ஸ் ஆசையை நிறைவேற்றுக்கொள்ள உருவாக்கப்பட்ட பாதுகாப்பான வழிமுறை என்றாலும், உடலுறவு கொள்ளும்போது பரவும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் கவசம். சொறி சிரங்கு, கிளைமீடியா, கொனேரியா போன்ற தொற்றுநோய்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பால்வினை தொற்றுநோய்களில் மிகவும் ஆபத்தான நோயான எய்ட்ஸ் (HIV) ஒருவரின் உயிரையும் எடுக்க வல்லது. இந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பால்வினை தொற்றுநோய் பொதுவானது என்றாலும், இந்த தொற்று ஏற்பட்ட பலர் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்படுகின்றனர். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஆணுறை உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், ஆணுறை பயன்படுத்துவதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு, பெரும்பாலானோர் தவிர்க்கின்றனர். இது ஒரு முட்டாள் தனம். உடலுறுவில் ஈடுபடும் இருவருக்கும் இந்த முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும். ஒருவருக்கு தொற்று இருந்தாலும், கவனக்குறைவாக இருக்கும்போது இந்த தொற்றுகள் மற்றவருக்கும் தொற்றிக் கொள்ளும்.
செக்ஸின்போது நீங்கள் ஆணுறை பயன்படுத்தினால் பால்வினை தொற்றுநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். கரு உருவாதலை தடுக்கலாம். ஆணுறைகளில் பல வகைகள் உள்ளன. அதில் நல்லவற்றை தேர்வு செய்வதும் அவசியம். பொதுவாக லூபிரிக்கண்ட் ஆணுறைகளை பயன்படுத்தலாம். இந்த ஆணுறைகளை பயன்படுத்தும்போது எந்தவித பக்கவிளைவகளும் ஏற்படுவதில்லை. மிகவும் அரிதாக ரப்பர் வகை ஆணுறைகளை பயன்படுத்தும்போது எரிச்சல், வலி, அலர்ஜி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆணுறையில் இருக்கும் சில Lube, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன.
latex வகை ஆணுறைகளை பயன்படுத்துவது உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால், பிராண்டு ஆணுறைகள் அல்லது பிளாஸ்டிக் ஆணுறைகளை தேர்தெடுத்துக்கொள்ளலாம். பிளாஸ்டிக்கில் உருவாக்கப்படும் polyurethane, polyisoprene போன்ற ஆணுறைகள் latex இல்லாமல் உருவாக்கப்படுகின்றன. தரமான ஆணுறைகள் விற்பனை செய்யப்படும் இடங்களில் non-latex ஆணுறைகள் கிடைக்கின்றன. தரமற்ற ஆணுறைகள் உபயோகிக்கும்போது பால்வினை நோய்களில் இருந்து தப்பிக்க வாய்ப்புகள் இல்லை.
தொற்றுநோயில் இருந்து தப்பிக்க
1. பால்வினை தொற்றுநோய் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை சந்தித்து முறையான ஆலோனை பெறும் வரை செக்ஸில் ஈடுபடவேண்டாம்
2. மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் சிகிச்சையை தொடருங்கள்
3. செக்ஸில் ஈடுபடும் முன் பார்ட்னருக்கு பால்வினை சார்ந்த நோய் இருக்கிறதா? என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
4. எப்போது உடலுறவில் ஈடுபட்டாலும், ஆணுறை பயன்படுத்துங்கள்
5. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்
6. பால்வினை சார்ந்து உங்கள் பார்ட்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளாரா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
மேலும் படிக்க | எச்சரிக்கை... தைராய்டு முதல் சிறுநீரக கல் வரை... அளவிற்கு மிஞ்சிய கீரை நல்லதல்ல
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ