Ration card | ரேஷன் கார்டில் இருக்கும் சிக்கல்களுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் இந்த வழியை தேர்வு செய்யவும்
ரேஷன் கார்டு (Ration card) குறைகளை சீக்கிரம் சரி செய்ய வேண்டும் என்று விரும்பினால் தமிழ்நாடு அரசு நடத்தும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானோர் ரேஷன் அட்டை (Ration card) வைத்திருக்கின்றனர். லட்சக்கணக்கில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இவர்களின் குறைகளை சரி செய்ய ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்துகிறது.
குறிப்பாக, ரேஷன் கார்டு பிரச்சனை இருப்பவர்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் தேதியை முதலில் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள். அந்த தேதியில் உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்து முறையாக புகார் அளிக்க நேரில் செல்லுங்கள்.
அப்படி செல்லும்போது சரியான ஆவணங்கள் எல்லாம் எடுத்துச் செல்லுங்கள். இந்த குறை தீர் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சனைகள் கூட அதிகாரிகள் தீர்த்து வைப்பார்கள். ஏற்கனவே புகார் அளித்திருந்தால் அது தொடர்பான ஆவணங்களையும் எடுத்துச் செல்லுங்கள்.
பொதுவாக, பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்தும் இந்த முகாமில் புகார் அளிக்கலாம்.
ரேஷன் கடை அல்லது அது தொடர்பான சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் மின்னல் வேகத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
எனவே ரேஷன் கார்டு தொடர்பான உங்கள் சிக்கல்களுக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த வழியை தேர்வு செய்யுங்கள்.