இந்திய உணவு வகைகள் பருப்பு வகைகள், அரிசி, காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்ற முக்கிய கூறுகளுடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. இந்த கூறுகள் ஒரு சுவையான உணவுக்கு அவசியம். சிலர் ரொட்டியை அதிகம் விரும்புகின்றனர், வடமாநில மக்கள் அதிகம் ரொட்டி சாப்பிடுகின்றனர். தென் மாவட்டங்களில் அரிசியை தான் பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இது தான் முதன்மை கார்போஹைட்ரேட் மூலமாக இருக்கிறது. உண்மையில், இந்திய உணவில் அரிசி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக பல பகுதிகளில் அரிசி இல்லாமல் உணவு முழுமையடையாது.
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் மசாலா நீர்: குடிச்சு பாருங்க
அரிசி வகைகள்
பருப்பு மற்றும் அரிசியின் கலவையைத் தாண்டி, கிச்சடி, கீர், பிரியாணி, புலாவ் மற்றும் பிற உணவுகள் அரிசியை முதன்மைப் பொருளாகப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவை எடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக வெள்ளை அரிசி சாப்பிடுவது உடலில் ரத்த சக்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறைந்த கிளைசெமிக் குறியீடுகளைக் கொண்ட அரிசி வகைகளைத் தேர்ந்தெடுத்து, சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் உணவுகளை அனுபவிக்க முடியும்.
அரிசி உணவு
இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை அரிசியை உட்கொள்வதை குறைக்குமாறு சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அரிசி உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர், இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் நீரழிவு நோயாளிகள் அரிசியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று இல்லை. அதற்குப் பதிலாக, குறைந்த அளவில் அவ்வப்போது மாற்று அரிசி வகைகளைத் தேர்வு செய்யலாம். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பல்வேறு வகையான அரிசிகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகை அரசி ஏற்றது, எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரவுன் அரிசி: சர்க்கரை நோயாளிகள் பிரவுன் ரைஸ் சாப்பிடலாம். பிரவுன் அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பிரவுன் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, பழுப்பு அரிசி மெதுவாக ஜீரணமாகும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக உயர்த்தாது.
சாம அரிசி: சாமா அரிசியில் 50க்கும் குறைவான கிளைசெமிக் குறியீடு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது சாப்பிடலாம். சாமா சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீக்கிரம் உயராது.
பாசுமதி அரிசி: பாஸ்மதி அரிசியை அவ்வப்போது சிறிய அளவில் சாப்பிடலாம். அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டே இதற்குக் காரணம். பாசுமதி அரிசியின் GA சுமார் 50-52 ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.
சிவப்பு அரிசி: சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை சாப்பிடலாம். சிவப்பு அரிசியின் GA சுமார் 55 ஆகும், எனவே இதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ