Can Diabetes Patients Eat Mushrooms: நீரிழிவு நோயாளிகள் முக்கியமாக தங்களின் உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சுகர் நோயாளிகள் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து கவனத்துடன் சாப்பிட வேண்டும். இருப்பினும், இந்த உணவுகளில் காளானை நாம் எப்போதும் புறக்கணித்து விடுகிறோம். ஏனெனில் பலர் இந்த காளான்களை பூஞ்சை வகையில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால் இந்த காளான் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு உணவுப் பொருள்ஆகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு காளான்கள் மிகவும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் காளானை ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் பதிலளித்துள்ளார். அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காளான்கள் ஏன் சிறந்த உணவு?
1. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்:
காளான் ஒரு சூப்பர் உணவாகும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் கிளைசெமிக் சுமை கொண்டது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது, அதாவது அதன் மூலம் நீங்கள் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
2. கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம்:
காளானில் மிகக் குறைந்த அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. குறைந்த கார்ப் உணவுகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
3. நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாக்க உதவும்:
காளானில் பாலிசாக்கரைடுகள் உள்ளன, இது நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க உதவுகிறது, இது நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
4. எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்:
காளானைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம், உடல் பருமன் நீரிழிவு நோயின் முதல் படியாகக் கருதப்படுகிறது. இது தவிர, அதிக எடையுடன் இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. காளான்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
காளானை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும்?
காளானில் புரதங்கள், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, டெர்பென்ஸ், குயினோலோன்கள், ஸ்டீராய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா-குளுக்கன் போன்ற பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன. மேலும் இந்த உணவுப் பொருளை சரியாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே பலனை நீங்கள் பெறலாம். ந்த் வகையில் நீங்கள் காளானை சாலட் வடிவில் வேகவைத்து சாப்பிடலாம், இது தவிர, குறைந்த எண்ணெய் போட்டு காய் செய்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ