இரவில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துகள் வரும்? நிபுணர்கள் அட்வைஸ் இதுதான்..!

நம்மில் பலருக்கு இரவில் தயிரை சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம் வெகுநாட்களாக உள்ளது. இக்குழப்பத்தை தீர்த்து வைக்க இந்த பதிவு உதவும்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 29, 2023, 04:52 PM IST
  • இரவில் தயிர் சாப்பிடலாமா?
  • சாப்பிட்டால் என்னென்ன ஆபத்துகள் நேரும்?
  • தயிரின் குண நலன்கள் என்ன?
இரவில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துகள் வரும்? நிபுணர்கள் அட்வைஸ் இதுதான்..! title=

இரவில் தயிர் அல்லது தயிர் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம் என நம் வீட்டில் பெரியவர்கள் கூறுவது வழக்கம். சில மருத்துவ நிபுணர்களும் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகின்றனர். அப்படி தயிரில் என்னதான் உள்ளது? இரவில் தயிரை சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துகள் வரும்..? 

செரிமான கோளாரை உண்டாக்கும்:

வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் இரவில் தயிர் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு செரிமான கோளாறு உண்டாகும். தயிர், பால் வகை உணவினை சேர்ந்தது என்பதுதான் இந்த செரிமானக்கோளாறுகளுக்கு காரணம். தயிரில் கொழுப்பு மற்றும் புரதம் அதிகளவில் இருக்கும். இதனால்தான் இரவில் தயிர் சாதம் அல்லது கட்டி தயிர் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவில் நம் உடலுக்கு பெரிதாக உழைப்பு இல்லாததால் சாப்பிட்ட உணவு செரிமானமாவதற்கு சிரமம் ஏற்படும். இதனால்தான் இரவில் உங்கள் உணவுடன் தயிர் கலப்பதை தவிர்க்க வேண்டும், 

மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!

சளி ஏற்படும் அபாயம் உள்ளது:

தயிர் உடல் சூட்டை தணிக்கும் பொருள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், தயிர் எப்படி நம் உடலின் சூட்டை தணிக்கிறது என தெரியுமா? ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்று படி, தயிர் நம் உடலில் உள்ள கப தோஷம் எனும் சக்தியை அதிகரிக்கிறது. பொழுது சாய்ந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவது அந்த கப தோஷ சக்தியை இன்னும் அதிகரிக்கும், அதனால் இரவில் தயிர் சாப்பிடுபவர்களுக்கு சளி, மூக்கடைப்பு, இருமல் போன்றா பிரச்சனைகள் உண்டாகும். இதனால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தயிரை இரவில் அரவே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். 

எப்போது தயிரை சாப்பிடலாம்? 

தயிரை இரவில் மட்டும் தவிற்கலாம். மற்றபடி காலை உணவு, மதிய லஞ்ச், இவ்வளவு ஏன் மாலை ஸ்நாக்ஸ் உடன் கூட எடுத்துக்கொள்ளலாம். பகல் நேரங்களில் நம் உடலுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும் அதனால் அந்த நேரத்தில் அளவுடன் தயிரை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

அலர்ஜி இருப்பவர்கள் கவனத்திற்கு:

நம்மில் பலருக்கு பால் சம்பந்தப்பட்ட உணவுகள் சாப்பிட்டால் உடல் ஏற்றுக்கொள்ளாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திப்போம். இதற்கு Lactose intolerance என்று பெயர். அதனால், உங்களுக்கு தயிரினால் அலர்ஜி ஏற்படும் என தெரிந்தால் அதை தவிர்க்கவும். 

தயிரினால் ஏற்படும் நன்மைகள்:

தயிரை உட்கொள்ளவும் செய்யலாம், உங்கள் முக மற்றும் சிக அழகினை மேம்படுத்திக்கொள்ளவும் உபயோகிக்கலாம். வீட்டில் தயாரித்த தயிரினை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தினை இன்னும் மேம்படுத்தும். தயிரை வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு அளப்பரிய நீர்ச்சத்து கிடைக்கும் என பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் சரியான அளவு தயிரினை எடுத்துக்கொள்ளலாம். இதை சில ஆயுர்வேத மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். சிலருக்கு உடல் சூட்டினால் கூட மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். இதை சரிசெய்ய தயிர் சாப்பிடலாம். 

மேலும் படிக்க | மொரு மொரு சமோசா செய்வது எப்படி...? காஜல் அகர்வாலிமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News