முடி உதிர்வை குறைக்க வெங்காய சாறு பயன்படுத்தலாமா?

தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காய சாறை பயன்படுத்தினால் மீண்டும் முடி வளரும் என்பதற்கான ஆரய்ச்சிகள் இன்னும் சரிவர நடைபெறவில்லை.    

Written by - RK Spark | Last Updated : Dec 16, 2022, 04:35 PM IST
  • பொடுகு தொல்லையால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  • வெங்காயத்தில் அதிகளவு சல்ஃபர் நிறைந்துள்ளது.
  • வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
முடி உதிர்வை குறைக்க வெங்காய சாறு பயன்படுத்தலாமா?  title=

இப்போது பலரும் ஆங்கில மருத்துவர்களை விடுத்து ஆயுர்வேதப்படி எளிய வீட்டு வைத்தியங்களை செய்துகொள்வதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.  அந்த வகையில் சமீப காலமாக முடி உதிர்விற்கும், பொடுகு தொல்லைக்கும், கருமையான நீண்ட கூந்தலை பெறுவதற்கும் வெங்காய சாறு மிகவும் உதவுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.  முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் வெங்காய சாறு புகழ்பெற்று விளங்கி வருகிறது.  வெங்காயத்தில் அதிகளவு சல்ஃபர் நிறைந்துள்ளது, இதிலுள்ள ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ப்ளமேட்டரி முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.

மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க 

சல்ஃபர் சத்து அதிகம் நிறைந்துள்ள வெங்காய சாறினை உங்கள் உச்சந்தலையில் சேர்க்கும்போது, இது உங்களுக்கு வலிமையான மற்றும் அடர்த்தியான முடியை வளர செய்கிறது.  தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காய சாறை பயன்படுத்தினால் மீண்டும் முடி வளரும் என்பதற்கான ஆரய்ச்சிகள் இன்னும் சரிவர நடைபெறவில்லை.  ஆனால் சில ஆய்வுகளின் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறை உச்சந்தலையில் வெங்காய சாறை தடவிய சிலருக்கு முடி வளர தொடங்கி இருக்கிறது.  இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் கிட்டத்தட்ட 74% பேருக்கு 4 வாரங்களுக்குப் பிறகு முடி வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது, இதனை நமது தலையில் தேய்க்கும்பொழுது நம்முடைய தலையில் இருக்கக்கூடிய நோய்க்கிருமிகளை இது அழிக்கிறது.  வெங்காய சாறை உச்சந்தலையில் தடுவும்போது அது தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டுகிறது.  இதனால் ரத்த ஓட்டம் பாய்ந்து முடியின் வேர்கள் பலமடைந்து முடி வளர்ச்சியின் நன்றாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்!  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News