GATE 2018 தேர்விற்கான முடிவுகளினை IIT கௌகாத்தி இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளினை அதிகாரபூர்வ இணையதளமான ate.iitg.ac.in -ல் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாக சிறிது நேரத்திலேயே இணைய நெரிசல் காரணமாக இணையதளம் ஸ்தம்பித்து போனது.
GATE தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது!
- gate.iitg.ac.in வலைதளத்திற்கு செல்லவும்
- அடுத்து வரும் பக்கத்தினில் தங்களது Enrollment எண்ணினை உள்ளிடவும்.
- பிறகு submit பொத்தானை கிளிக் செய்யவும்.
- பின்னர் உங்களது மதிப்பெண் பட்டியல் காட்சிப்படுத்தப்படும், அதன் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்
GATE 2018 தேர்வு முடிவில் எதிர்பார்க்கப்படும் Cut-Off மதிப்பெண்கள்
GATE தேர்வு என்பது முதுகலை தொழில்பிரிவு படிப்புகளுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வுகள் ஆகும். இந்த ஆண்டிற்கான தேர்வுகள் கடந்த பிப்., 03-04 மற்றும் பிப்., 10-11 தேதிகளில் நடத்தப்பட்டது.