அழகை கெடுக்கும் இரட்டைக் கன்னம் நீங்க... உணவு பழக்கங்களும் பயிற்சிகளும்

How To reduce Double Chin: இரட்டை கன்னம் கொழுப்பைக் குறைப்பது மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதும் ஒன்றல்ல. சில சமயங்களில் உடல் எடையை குறைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2025, 01:54 PM IST
  • முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க, அதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முதலில் அவசியம்.
  • இரட்டை கன்னத்தை போக்க நீங்கள் செய்ய வேண்டியவை.
  • இரட்டை கன்னம் குறைய தவிர்க்க வேண்டிய சில உணவுகள்.
அழகை கெடுக்கும் இரட்டைக் கன்னம் நீங்க... உணவு பழக்கங்களும் பயிற்சிகளும் title=

How To reduce Double Chin: இரட்டை கன்னம் கொழுப்பைக் குறைப்பது மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதும் ஒன்றல்ல. சில சமயங்களில் உடல் எடையை குறைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. 

நம் உடல் எடை அதிகரிக்கும் போது, ​​அதன் தாக்கம் முதலில் நம் முகத்தில் தெரியும். கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிக அளவில் சேரும் நிலையில் ‘இரட்டை கன்னம்’ உண்டாகி முக அழகைக் கெடுக்கும். இது வயதான தோற்றத்தையும் கொடுக்கும். முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க, அதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முதலில் அவசியம். 

மோசமான உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை முகத்தில் கூடுதல் கொழுப்பு சேர்வதற்கான சில முக்கிய காரணங்களாகும். இதை தடுக்க, முதலில் நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

நீர் சத்து குறையாமல் இருத்தல், சீரான உணவு பழக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். இதனுடன், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை(Healthy Food) உட்கொள்வதை அதிகரிக்கவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து விலகி இருங்கள்.

இரட்டை கன்னம் குறைய தவிர்க்க வேண்டிய சில உணவுகள் 

உப்பு

அதிக அளவிலான உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஊறுகாயில் அதிக அளவு உப்பு உள்ளது. அதனை குறைத்துக் கொள்வது நல்லது. பல சமயங்களில் தின்பண்டங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுவையை அதிகரிக்க உப்பைத் தூவி சாப்பிடும் வழக்கமும் உள்ளது. ஆனால் அது நம் ஆரோக்கியத்திற்கு கேடு. உப்பில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குறிப்பாக முகத்தைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்க காரணமாகிறது. அதிகப்படியான சோடியம் உடலில் நீரை தேக்கி பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

துரித உணவுகள்

துரித உணவு அடிக்கடி தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. துரித உணவுகளில் அதிக அளவு சோடியம், சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. உடலில் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் முகம் மற்றும் உடல் கொழுப்பை அதிகரிக்கலாம். முகத்தில் கொழுப்பைத் தடுக்க, நொறுக்குத் தீனிகளில் இருந்தும் விலகி இருப்பது அவசியம். அதற்கு பதிலாக, புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. எடை அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக, உடல் எடை அதிகரிப்பதோடு, முகத்தில் கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், சிவப்பு இறைச்சியை உட்கொள்வதைக் குறைக்கவும்.

 மேலும் படிக்க | வெறும் 5 நிமிட உடற்பயிற்சி போதும்... ஒரே மாதத்தில் தொப்பை எல்லாம் மாயமாய் மறையும்

இரட்டை கன்னம் குறைய செய்ய வேண்டியவை

பிஸியான வாழ்க்கை மற்றும் அதிகரித்து வரும் வேலை அழுத்தம் காரணமாக, பலருக்கு சரியான தூக்கம் வருவதில்லை. இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், அதில் ஒன்று முகத்தில் கொழுப்பு அதிகரிப்பது. தூக்கமின்மையால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, நல்ல தூக்கம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம்.

முகத்திற்கான பயிற்சி

இரட்டைக் கன்னத்தைக் குறைக்க முக பயிற்சி என்னும் முக யோகா பலன் கொடுக்கும்.  முக யோகா செய்ய பல வழிகள் உள்ளன. முக தசைகளுக்கு வேலை கொடுக்கும் வகையில், வாயை நாக்கை அசைத்து செய்யும் பயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். இதன் காரணமாக, முக இயக்கங்கள் அதிகரித்து, படிப்படியாக உங்களுக்கு விரும்பிய பலன் கிடைக்கும். 

உடற்பயிற்சி 

உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுடன் முகத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற கார்டியோ உடற்பயிற்சிகள் கலோரிகளை எரித்து, அதன் மூலம் ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைக்கிறது. உடலில் கொழுப்பு குறையும் போது, ​​முகத்தில் உள்ள கொழுப்பும் குறைந்து, முகம் மெலிதாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | எச்சரிக்கை மெல்லக் கொல்லும் பிபி... கட்டுக்குள் வைக்க உதவும் சில பயிற்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News