கோயம்புத்தூர்: இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைமையிலான எதிர்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
ஆனால், முக்கியமான சில தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி 12 மணி நேரம் ஆன நிலையிலும் இழுபறி நிலை நீடித்து வந்தது.
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் பிஜேபியின் வானதி சீனிவாசன் வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி. இன்று காலையில் தொடங்கியது முதலே வானதிக்கும், கமலஹாசனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது
Also Read | தமிழகம் இனி வெல்லும்! AIIMS சரித்திரம் அதை வழிமொழியும்; நாளைய தமிழகம் அதை சொல்லும்
தற்போது வந்த செய்திகளின்படி, தசாவதார கமலஹாசன், அரசியல் களத்தில் பிந்தங்கிவிட்டார், அவரை எதிர்த்து போட்டியிட்ட பல வேட்பாளர்களில் அவருக்கு கடினமான போட்டியாளராக இருந்த பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.
Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR