மொத்தம் 70 தொகுதிகளை கொண்டுள்ளது டெல்லி சட்டமன்றம். இதற்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி உள்ளது. மாலை 6.30 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றது யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுவரை டெல்லி தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியது யார்? யார் யார் டெல்லியை ஆட்சி செய்துள்ளனர். யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் 36 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது அவசியம்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து மூன்று முறை ஆம் ஆத்மியே டெல்லியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக்கணிப்புகளில் 50 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக ஆட்சியில் அமர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆம் ஆத்மியோ இந்த கணிப்புகளை நிராகரித்து மீண்டும் வெற்றி பெறும். அரவிந்த் கெஜ்ரிவால் நான்காவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமருவார் என்று கூறுகின்றனர்.
ஆதிக்கம் செலுத்தியது யார்?
1952ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை டெல்லி சட்டமன்றத்தில் மொத்தமாக 48 தொகுதிகளே இருந்த நிலையில், அதன் பிறகு 70 தொகுதிகளாக பிரிக்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மட்டுமே போட்டிகள் நிலவி வந்தன. அப்போது காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பின்னர் 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதாவது பாஜக 31, ஆம் ஆத்மி 28 மற்றும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கைகோர்த்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.
2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆதிமி 62 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் ஆம் ஆத்மியே மீண்டு ஆட்சி அமைத்தது.
1998 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சி
1993ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு பின்னர் மீண்டும் டெல்லி தொகுதியில் கால் பதித்தது காங்கிரஸ், தொடர்ந்து 1998, 2003, 2008 என காங்கிரஸ் கட்சி தொடர் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், 2013ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற 2015 மற்றும் 2020ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
மேலும் தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை. எனவே தேர்தல் போட்டியானது பாஜக மற்றும் ஆம் ஆதிமிக்கே என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இன்று (பிப்.08) மாலைக்குள் இதற்கான விடை கிடைத்துவிடும்.
மேலும் படிங்க: மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா - மத்திய அரசு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ