Bad Girl Movie: பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் பேட் கேர்ள் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள நிலையில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 14ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தில் டீசன் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. டீசரில் வரும் படுக்கை அறை காட்டு பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிலையில், இதுகுறித்து நடிகை ஷர்மிளா, பேசி இருக்கிறார்.
2 நிமிட டீசரை வைத்து கருத்து சொல்லி விட முடியாது
அதில், படத்தின் இயக்குனரே புதுமை பெண்,. வாழ்க்கை சாதித்த பெண் என்று பெயர் வைக்காமல் பேட் கேர்ள் என்று தலைப்பு வைத்துள்ளார். படத்தின் டீசர் தான் தற்போது வெளியாகி உள்ளது. 2 நிமிட டீசரை வைத்து படம் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று கருத்து சொல்லி விட முடியாது.
மிகப்பெரிய இயக்குனரான வெற்றிமாறன் தயாரித்துள்ள இப்படத்தின் டீசரில் படத்தின் மொத்த கதையையும் சொல்லும் அளவுக்கு வெளியிட வாய்ப்பு இல்லை. படத்தில் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கு என்று நான் நினைக்கிறேன்.
பேர்ட் கேர்ள் டீசரின் தொடக்கத்தில் அந்த பெண் எனக்கு ஒரு பாய் ஃபிரண்டு வேண்டும் என கேட்பது போல காட்சி இருக்கிறது. இது டீசரின் முதல் காட்சி தானே தவிர படத்தின் முதல் காட்சி இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். படத்தின் முக்கிய காட்சிகளை டீசரில் வைத்துள்ளனர். அதனாலேயே படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று இணையத்தில் பேசப்பட்டுள்ளது. இதுவே படத்திற்கான வெற்றிதான் என தெரிவித்தார்.
பெற்றோருக்கு பாடமாக இருக்கும்
தொடர்ந்து பேசிய அவர், பெற்றோர்கள் தனது பெண் குழந்தைகளை கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பதற்காக அந்த உடையை போடாதே இந்த உடையை போடு, ஆண்களிடம் பேசாத போன்று கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இதையெல்லாம் செய்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது. பேட் கேர்ள் திரைப்படம் இதை பற்றியதாக இருக்கலாம். இந்த படம் பெற்றோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
மேலும் டீசரில் படுக்கை அறையில் ஆணுடன் இருப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் வருகிறது. அந்த பெண் அப்படி இருக்க நினைக்கிறாளா அல்லது அது போன்ற பிரச்சனையில் சிக்கி மீண்டு வருகிறாளா என்பதை படத்தை பார்த்தால்தான் தெரியும் என நடிகை ஷர்மிளா பேசி இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ