பெற்றோருடன் உடலுறவு? இல்லை அதை பார்ப்பது...? பிரபலத்தின் ஆபாச கேள்வியால் சர்ச்சை

Ranveer Allahbadia: யூ-ட்யூப் நிகழ்ச்சி ஒன்றில் யூ-ட்யூப் பிரபலம் ஒருவர் ஆபாசமான கேள்விகளை எழுப்பியிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 10, 2025, 08:17 PM IST
  • இந்த யூ-ட்யூப் பிரபலம் பிரதமர் மோடியின் கைகளால் விருது வாங்கியவர்.
  • யூ-ட்யூபில் கோடிக்கணக்கில் பாலோயர்களை வைத்துள்ளார்.
  • இவர் பேசிய காணொலி வைரலானதை தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.
பெற்றோருடன் உடலுறவு? இல்லை அதை பார்ப்பது...? பிரபலத்தின் ஆபாச கேள்வியால் சர்ச்சை title=

Ranveer Allahbadia Obscene Joke Controversy: திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்டோர்தான் முன்பெல்லாம் பிரபலங்களாக அறியப்பட்டனர். ஆனால், சமூக வலைதலங்களில் ஆதிக்கம் அதிகமான இந்த காலகட்டத்தில் பேஸ்புக் பிரபலம், ட்விட்டர் பிரபலம், இன்ஸ்டா பிரபலம், யூ-ட்யூப் பிரபலம் என ஒவ்வொரு தளங்களுக்கும் ஆயிரக்கணக்கில் பிரபலங்கள் இருக்கிறார்கள். 

அதிலும் இன்ஸ்டா பிரபலங்கள் மற்றும் யூ-ட்யூப் பிரபலங்களுக்கு பாலோயர்கள் அதிகம் எனலாம். இன்ஸ்டா மற்றும் யூ-ட்யூபில் வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதால் அவர்களுக்கு அதிகமான பார்வையாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ரன்வீர் அல்லாபாடியா என்ற சமூக வலைதளப் பிரபலம்தான் இன்று பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார்.

Ranveer Allahbadia: யூ-ட்யூப் பிரபலம்... கோடிக்கணக்கில் பாலோயர்கள்

BeerBiceps என்ற சேனலில் பல்வேறு வகையிலான உள்ளடக்கங்களில் இவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு 12 யூ-ட்யூப் சேனல்கள் உள்ளன. BeerBiceps Media Private Limited என்ற ஊடக நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவருக்கு யூ-ட்யூபில் 1.05 கோடி பார்வையாளர்களும், இன்ஸ்டாகிராமில் 45 லட்சம் பாலோயர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 'India's got latent' என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றின் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் நிகழ்ச்சியின் ஜட்ஜ்களில் ஒருவராக கலந்துகொண்ட ரன்வீர், அப்போது நிகழ்ச்சி பங்கேற்பாளரிடம் கேட்ட கேள்விதான் தற்போது சர்ச்சையை கிளப்பி வந்துள்ளது.

மேலும் படிக்க | அன்லிமிட்டட் பானிபூரி ஆஃபர்! கடைக்காரரின் வித்தியாசமான முயற்சி..வைரல் செய்தி!

Ranveer Allahbadia: ஆபாசமான கேள்வி 

நிகழ்ச்சி பங்கேற்பாளரிடம் ஜட்ஜ்கள் நகைச்சுவையாக கேள்வி கேட்க வேண்டும். அப்படி, ரன்வீர் ஒரு பங்கேற்பாளரிடம்,"உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் தினமும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா அல்லது ஒரு முறையாவது அவர்களுடன் சேர்ந்து உடலுறவு மேற்கொண்டு, உங்களின் பாலியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா?" என கேள்வி எழுப்பி குழுங்கி குழுங்கி சிரித்தார். அங்கிருந்த பார்வையாளர்களும் இதனை ரசித்து கைத்தட்ட, அருகில் இருந்தவர்களும் இதை ஒரு நகைச்சுவையாகவே கருதி, சகஜமாக இருந்து அதை ரசித்தனர். 

Ranveer Allahbadia: எழுந்த கடும் கண்டனங்கள்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரன்வீர் பேசியது நகைச்சுவை அல்ல என்றும் அது ஆபாசத்தின் உச்சம் என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அனைத்து வயதினரும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பிரபல இப்படி ஆபாசமாக பேசுவது அவரின் பாலோயர்களிடம் என்ன மாதிரியான முன்மாதிரியா அமையும் என்றும் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளம் மூலம் இதுபோன்ற ஆபாசமான கருத்துகளை பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வைக்கப்பட்டன. 

Ranveer Allahbadia: மகாராஷ்டிரா முதல்வர் கருத்து

மேலும், இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"இதுகுறித்து எனக்குத் தெரியவந்தது. இருப்பினும் நான் இன்னும் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. இது மிகவும் மோசமானது என்றும் இது தவறு என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் நாம் மற்றவர்களின் சுதந்திரத்தை ஆக்கிரமிக்கும் போது அது அங்கேயே முடிந்துவிடுகிறது. அனைவருக்கும் வரம்புகள் உள்ளன. யாராவது அவற்றை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிலளித்திருந்தார்.

மேலும் படிக்க | டெல்லியின் தளபதி யார்? முதலமைச்சர் ரேஸில் இருக்கும் 5 பேர்? பாஜகவில் என்ன நடக்கிறது?

Ranveer Allahbadia: மன்னிப்பு கேட்ட ரன்வீர் 

இந்நிலையில், ரன்வீர் அல்லாபாடியா தான் பேசியதற்கு பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசியது முற்றிலும் தவறான ஒன்று என்றும் அது நகைச்சுவையானது இல்லை என்றும் அவர் இன்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருந்தார். மேலும், தான் பேசியதற்கு மன்னிப்பை தவிர வேறு எதுவும் விளக்கம் அளிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  

நான் இயங்கும் இந்த தளத்தை இப்படி பயன்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நடந்த செயலுக்கு பின்னால் உள்ள நியாயத்தையோ அல்லது காரணத்தையோ நான் எதுவும் கொடுக்கப்போவதில்லை. மன்னிப்பு கேட்கத்தான் நான் இந்த வீடியோவை போடுகிறேன்" என அதில் பேசியிருந்தார் 

மேலும், "அந்த நிகழ்ச்சியை எல்லா வயதினரும் பார்க்கிறார்கள், அந்தப் பொறுப்பை லேசாக எடுத்துக் கொள்ளும் நபராக நான் இருக்க விரும்பவில்லை. குடும்பம் என்பது நான் ஒருபோதும் அவமரியாதை மாட்டேன்" என குறிப்பிட்ட அவர்,"வீடியோவில் முறையற்ற பகுதிகளை நீக்குமாறு அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளேன். இறுதியில் நான் சொல்லவருவது மன்னிப்புதான். ஒரு மனிதனாக நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என அதில் பேசியிருந்தார். இவர் மீது வழக்குப்பதிவு ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மனித உரிமை ஆணையத்தில் புகார் வந்துள்ளது.

Ranveer Allahbadia: பிரமதர் மோடி கையால் விருது வாங்கிய ரன்வீர்
 
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்லியில் நடந்த National Creators Award என்ற அரசின் விருது விழாவில் இவருக்கு Disruptor of the Year என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடி இவருக்கு அளித்தார். அதாவது, இந்த நிகழ்ச்சி டிஜிட்டல் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் கடந்தாண்டு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | கேரளா லாட்டரி Win Win W-808 குலுக்கல்.. முதல் பரிசு 75 லட்சம் அதிர்ஷ்டம் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News