இயக்குனர் சுந்தர் சி தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கான பிறந்தநாள் பார்ட்டியில் வடிவேலு, விஷால், யோகி பாபு, விமல், சினேகா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுந்தர் சி-க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இது தொடர்பான புகைப்படங்களை சுந்தர் சி மனைவி குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களில் சுந்தர் சி உடன் வடிவேலு, பிரசாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
வின்னர் திரைப்படம்
2003ஆம் ஆண்டு சுந்தர் சி-யின் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், கிரண், வடிவேலு, நம்பியார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த வின்னர் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ஆக்சன் கலந்த காதம் மற்றும் காமெடி கதைகளத்தில் வெளியான இத்திரைப்படம் பட்டித் தொட்டி எங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற கைப்பிள்ளை கதாபாத்திரத்திம் எவராலும் மறக்க முடியாதவை.
மேலும் படிங்க: தினமும் வெள்ளை எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
டாப் ஸ்டார் பிரசாந்த்
இயக்குனர் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிரசாந்த். இப்படம் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், தொடந்து திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்து டாப் ஸ்டாராக வலம் வந்தார். 2006ஆம் ஆண்டுக்கு பின் அவ்வபோது படம் நடித்து வந்த இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் மூலம் இவருக்கு திரைத்துறையில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வின்னர் 2 அப்டேட்?
வின்னர் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மீண்டும் இந்த கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். எனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ