Republic Day Latest News: குடியரசு தினம் என்றால் என்ன? நாட்டு மக்கள் அனைவரும் குடியரசு தின நாளை எதற்காக கொண்டாடுறோம்? குடியரசு தினத்தை கொண்டாட காரணம் என்ன? அன்றைய தேதியில் நமது கடமை என்ன? குடியரசு தினம் அன்று இந்தியாவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
பொதுவாக சுதந்திர தினம் என்றால் என்ன? எனக் கேட்டால், 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. நாம் அனைவரும் வெள்ளைக்காரரிடம் இருந்து கிட்டத்தட்ட 200 வருஷமாக போராடி சுதந்திரத்தை அடைந்தோம் என்ற வரலாற்றைக் கூறுவார்கள்.
அதுவே குடியரசு தினம் என்றால் என்ன? எனக் கேட்டால், பொதுவாக குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடி ஏத்துவார். இந்திய இராணுவ அணி வகுப்பு நடக்கும். மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடக்கும் எனக் கூறுவார்கள். ஆனால் நாம் ஏன் குடியரசு தினத்தை கொண்டாடுறோம்? இரு ஆண்ட்டில் 365 நாட்கள் இருக்கும் பட்சத்தில், அது ஏன் ஜனவரி 26 என்ற நாளை குடியரசு தினத்துக்காக தேர்ந்தெடுத்தோம்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை மூவர்ண தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று தேசிய கொடி ஏற்றப்படுகிறது. இந்திய பிரதமராக இருக்கக்கூடியவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார். அதேபோல மாநிலங்களில் முதல்வராக இருக்கக்கூடியவர் தேசியக் கொடியை ஏற்றுவார்.
இதேபோல குடியரசு தினத்தில் இந்திய குடியரசுத் தலைவராக (தற்போது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி மர்மு) இருக்கக்கூடியவர் தேசியக் கொடியை ஏற்றுவார். அதேபோல மாநிலத்தை பொறுத்தவரைக்கும் அந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்கக்கூடியவர் தேசியக் கொடியை ஏற்றுவார். தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியை ஏற்றுவார்.
மேலும் இந்தமுறை நாடு முழுவதும் 76 வது குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. வரக்கூடிய ஜனவரி 26 ஒவ்வொரு வருடமும் நமது குடியரசு தின விழாவில் ஒரு வெளிநாட்டு அதிபரோ அல்லது பிரதமரோ சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வார்கள்.
இதுக்கு முன்பு இந்திய குடியரசு தின விழாவில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர், எகிப்தித் நாட்டின் அதிபர் உட்பட பல அதிபர்கள் தொடர்ச்சியாக கலந்து கொள்வார்கள். இந்த வருடம் சிறப்பு விருந்தினராக இந்தோனேசியாவினுடைய அதிபராக இருக்கக்கூடிய பிராவோ சுபியாந்தோ கலந்து கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துடுள்ளது.
குடியரசு தினத்தன்று இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவரும் ஒரு அலங்கார ஊர்தியில் டெல்லி கடமைப்பாதையில் வருவார்கள். அவங்களுக்கு பின்னால் பாதுகாப்பு படைவீரர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்பதற்காக இந்தியாவின் பிரதமர் காத்திருப்பார். அவர்கள் வந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கொடியை நம்ம நாட்டின் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் ஏற்றுவார்கள்.
அதன்பிறகு பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தொடர்ச்சி அணிவகுப்பு நடைபெறும். பின்னர் நமது இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில், ராணுவத்திடம் என்ன மாதிரியான தொழில்நுட்பங்கள் இருக்கு, அவர்களின் சிறப்பு மற்றும் சாகசங்கள் நடைபெறும். பல்வேறு ஏவுகனைகள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்கள் அணிவகுப்பு நடக்கும். இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும். ஏனென்றால் இந்தியாவின் பலம் காட்டப்படும். அதன்பிறகு குடியரசு தின கொண்டாட்டம் முடிவடையும்.
குடியரசு என்றால் என்ன?
முதலில் குடியரசு என்றால் என்ன? என்பதைக் குறித்து பார்ப்போம். மக்கள் மக்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதையே குடியரசு என்கிறோம். உதாரணத்துக்கு ஒரு கிராம பஞ்சாயத்து தலைவரில் இருந்து நம் நாட்டின் பிரதமர் வரைக்கும் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்படு தான்.
அதாவது சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றால், அதில் பல அரசியல் கட்சிகள் தங்களுக்கான ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் போட்டியிடுவார்கள். அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்கள் வாக்களிப்பதால், வெற்றி பெற்றவர் வேட்பாளர் எம்எல்ஏ-வாகிறார். அந்த எம்எல்ஏ-க்கள் சேர்ந்து யாரை முன்மொழிகிறார்களோ, அவர்கள் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆகிறார்கள்.
அதேபோல தான் நாடாளுமன்ற தேர்தலிலும் எம்பிக்களுக்கு வாக்களிக்கிறோம். எந்த கட்சியின் எம்பிக்கள் அதிகமாக வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்.
குடியரசுத் தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், நாம் ஏற்கனவே வாக்களித்து தேர்ந்தெடுத்து வைத்திருக்கக்கூடிய எம்எல்ஏக்களும், எம்பிக்களும் சேர்ந்து வாக்களித்து தான் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இப்படி மக்கள் பிரதிநிதிகள் மூலமாக முதல்வரை தேர்ந்தெடுப்பது, பிரதமரை தேர்ந்தெடுப்பது மற்றும் அதே மக்கள் பிரதிநிதிகள் மூலமாகத்தான், அதாவது எம்எல்ஏக்களும், எம்பிக்களும் வாக்கத்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம். இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பை "குடியரசு" எனப்படுகிறது.
நாம் நமக்கான இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, அதை அமலுக்கு கொண்டு வந்த நாளை தான் "குடியரசு நாளாக" கொண்டாடி வருகிறோம்.
அரசியலமைப்பு என்றால் என்ன?
நாட்டில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படையான தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒரு கவுன்சிலர் தேவை. நமது பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பதற்கு ஒரு எம்எல்ஏ தேவை, மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. நமக்கு ஒரு பிரச்சனை மற்றும் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டால், நம்மை பாதுகாப்பதற்கு ஒரு காவல்துறை தேவை.
அதேபோல சிவில் பிரச்சனை, சொத்து பிரச்சனை, குடும்ப பிரச்சனை என நமது பிரச்சனைகளை தீர்க்க நமக்கு ஒரு நீதிமன்றம் தேவை. நமக்கு ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தேவை. நமது மாவட்டத்தில் நடக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாள ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேவை. இதுபோன்று மக்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் கட்டி அமைச்சிருக்கோம்.
மேலும் கருத்துரிமை, பேச்சுரிமை, வாக்களிக்கும் உரிமை, கல்வி, சுகாதாரம், தனிமனித சுதந்திரம் போன்ற அத்தனை உரிமைகளும் ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து ஒரு சட்ட புத்தகமாக வடிவமைத்திருக்கிறோம். அந்த சட்ட புத்தகம் தான் நமது அரசியலமைப்பு.
ஜனவரி 26 குடியரசு தினம் வரக் காரணம் என்ன?
நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சமமானது. இங்கு யாரும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை கிடையாது. எந்த மதமாகவும், எந்த சாதியாகவும் இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது. எனவே அனைவருக்கும் அனைத்து உரிமையும் இருக்கிறது என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தான் "இந்திய அரசியலமைப்பை" உருவாக்கி, அதை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட தினம் தான் "ஜனவரி 26" அதை தான் நாம் ஒவ்வொரு வருடமும் "குடியரசு தினம்" எனக் கொண்டாடி வருகிறோம்.
நமது நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும், நமது நாட்டை நிர்வகிப்பதற்கு நம்மிடம் அரசியலமைப்பு சட்டம் கிடையாது. எனவே நமக்கான சட்டம் நமக்கு தேவைப்படாது. 1947 ஆகஸ்ட் 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் தலைமையில் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு உருவாக்கப்படுகிறது.
இந்த அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவால உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 தேதி அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் பிறகு இந்த அரசியலமைப்பு சட்டம் முழுமையாக 1950 ஜனவரி 26 ஆம் தேதி அன்று அமலுக்கு வருகிறது.
மேலும் படிக்க - குடியரசு தினம் 2025: இதுவரை நீங்கள் அறிந்திராத 10 மிக முக்கியமான தகவல்கள்
மேலும் படிக்க - குடியரசு தினத்தையொட்டி குழந்தைகளுக்கு இதனை கற்றுத் தரவும்!
மேலும் படிக்க - குடியரசு தின விழா: இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் கருப்பொருள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ