EPFO: உங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை அறியும் சில எளிய வழிமுறைகள்

டிஜிட்டல் வழிமுறையின் மூலம் உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பைக் கண்காணிப்பது எளிமையான வேலையாகிவிட்டது. மொபைல் செயலிகள், அதிகாரப்பூர்வ EPFO ​​போர்டல், SMS மற்றும் மிஸ்டு கால் சேவைகள் உள்ளிட்ட பல தளங்கள் மூலம் ஊழியர்கள் தங்கள் PF இருப்பைச் சரிபார்க்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2025, 02:11 PM IST
  • EPFO ​​போர்ட்டலைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்ளும் முறை.
  • உங்கள் UAN உங்கள் முதலாளியால் சரிபார்க்கப்பட்டு ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • Missed Call அழைப்பைப் பயன்படுத்தி, பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்ளும் முறை.
EPFO: உங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை அறியும் சில எளிய வழிமுறைகள் title=

டிஜிட்டல் வழிமுறையின் மூலம் உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பைக் கண்காணிப்பது எளிமையான வேலையாகிவிட்டது. மொபைல் செயலிகள், அதிகாரப்பூர்வ EPFO ​​போர்டல், SMS மற்றும் மிஸ்டு கால் சேவைகள் உள்ளிட்ட பல தளங்கள் மூலம் ஊழியர்கள் தங்கள் PF இருப்பைச் சரிபார்க்கலாம்.

PF கணக்கு இருப்பைச் சரிபார்க்க, உங்களுக்கு UAN எண், செயலில் உள்ள தொலைபேசி எண் மற்றும்  இணைய வசதி ஆகியவை தேவைப்படும்.

EPFO ​​போர்ட்டலைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்ளும் முறை

1. கணினி அல்லது மொபைல் உலாவியில் www.epfindia.gov.in  என்ற இளையதளத்திற்கு செல்லவும்.

2. 'Our Services' பிரிவின் கீழ் 'For Employees' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. 'Services' பிரிவின் கீழ் 'Member Passbook' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4. பிறகு உங்களை போர்ட்டலுக்கு  உங்களை இட்டுச் செல்லும். இதில், நீங்கள் உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

5. லாக்- இன் செய்த பிறகு, உங்கள் PF பாஸ்புக் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை நீங்கள் சரிபார்க்கலாம்.

குறிப்பு: இந்தச் சேவையை அணுகுவதற்கு முன்பு உங்கள் UAN உங்கள் முதலாளியால் சரிபார்க்கப்பட்டு ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

UMANG செயலியை பயன்படுத்தி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்ளும் முறை

1. Play Store அல்லது App Store இலிருந்து Umang செயலியைப் பதிவிறக்கவும்.

2. உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவுசெய்து OTP சரிபார்ப்பை முடிக்கவும்.

3. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கிடைமட்ட பட்டிகளைத் தட்டி 'Service Directory' செல்லவும்.

4.'EPFO' ஐத் தேடி 'View Passbook.' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5. உங்கள் PF கணக்கு விவரங்களைக் காண உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

SMS மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்ளும் முறை

1. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து ‘EPFOHO UAN ENG’ என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

2. உங்கள் பிராந்திய மொழியில் அறிய ‘ENG’ என்ற எழுத்துக்களுக்கு பதிலாக, உங்கள் விருப்பமான மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை டைப் செய்து  (எ.கா., இந்திக்கு HIN, மராத்திக்கு MAR, தமிழுக்கு TAM).

3. இந்த சேவை ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கிறது.

Missed Call அழைப்பைப் பயன்படுத்தி, பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்ளும் முறை

1. உங்கள் PF இருப்பைச் சரிபார்க்க மற்றொரு விரைவான முறை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்ட் கால் அழைப்பைச் செய்வதாகும்.

2. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து 9966044425 என்ற எண்ணை டயல் செய்யுங்கள்.

3. அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும், மேலும் உங்கள் PF கணக்கு விவரங்களுடன் ஒரு SMS பெறுவீர்கள்.

 

Trending News