EPS Pension: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி சில புதுப்பிப்புகள் வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய சலுகைகள் குறைவாக இருப்பதால் தனியார் துறை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர். சமீப காலங்களில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்து பல வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து விரைவில், தற்போது ரூ.1,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயரும் என கூறப்படுகின்றது.
EPS 95, Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு தங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிக்கவும் நிதி அழுத்தத்தை சமாளிக்கவும் குறைந்தபட்சமாக ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு மூலம் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதிய அமைப்பின் (Employees Pension Scheme) மூலம் இபிஎஸ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இந்த EPS-95 மாதாந்திர ஓய்வூதியத்தை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் எப்போது உயரும்?
மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை வேகம் பெற்று வருகிறது. இந்த தொகையை அரசு விரைவில் அதிகரிக்கும் என்றும் இதற்கான பணிகள் நடந்துவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPS-95 Pension 2025: இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஸ் 95 ஓய்வூதியம் பெற பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- ஓய்வூதியம் பெற இந்திய குடிமகனாக இருப்பதும், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிவதும் அவசியமாகும்.
- பணியாளர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
- இதற்கு ஊழியர்கள் EPFO-வில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும்.
- வழக்கமான EPS-95 ஓய்வூதியம் 2025 ஐப் பெற இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) வயது குறைந்தபட்சம் 58 ஆக இருக்க வேண்டும்.
- ஏர்லி பென்ஷன், அதாவது முன்கூட்டியே ஓய்வூதியத்தைப் பெற, அரசாங்கத்திடமிருந்து ஆரம்பகால ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பதாரர் 50 வயதை எட்டியிருக்க வேண்டும்.
- இபிஎஸ் கணக்கில் நிறுவனத்தின் பங்களிப்பாக 8.33% செலுத்தப்படுகின்றது. மேலும் மாதத்திற்கு ரூ.15,000 வரை சம்பளத்தில் 1.16% மத்திய அரசால் பங்களிக்கப்படுகிறது.
- ஊழியரின் 12 சதவீத பங்களிப்பு முழுவதும் EPF கணக்கிற்கு செல்கிறது.
- இந்தத் தொகை ஊழியரின் மொத்த சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | UPI மூலம் ரூ. 30,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
மேலும் படிக்க | SIP முதலீடு: 10 ஆண்டுகளுக்கு ரூ.30,000 vs 30 ஆண்டுகளுக்கு ரூ.3,000 - எது சிறந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ