Post Office Small Savings Scheme: ஒவ்வொரு மாதமும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கான வழிமுறையாக பலர் சிறு சேமிப்பு திட்டங்களை விரும்புகிறார்கள். குறிப்பாக, தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கான சிறந்த விருப்பங்களை வழங்குகின்றன.
அதனால்தான் அவை மிகவும் மக்களால் விரும்பப்படுகின்றன. இப்போது இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பான விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தபால் அலுவலக திட்டங்களுக்கானது மட்டும் என்பதை இங்கு தெரிவித்துகொள்கிறோம்.
இது தொடர்பான சுற்றறிக்கையை தபால் துறையின் இணையத்தளத்தில் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான KYC அதாவது 'வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும்' வசதியின் விதிகளை தபால் துறை மாற்றியுள்ளது. மாற்றங்களின் கீழ், தபால் துறை திட்டங்களில் அதிக முதலீடு செய்பவர்களுக்கு விதிகள் கடினமாக்கப்பட்டுள்ளன.
KYC உடன் ஆதாரம் கொடுக்கப்பட வேண்டும்
இப்போது ஒரு முதலீட்டாளர் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்தால், அவர் KYC ஆவணங்கள் வடிவில் வருமானச் சான்றையும் வழங்க வேண்டும். இது தொடர்பாக, சிறுசேமிப்புத் திட்டங்களின் குறிப்பிட்ட வகை முதலீட்டாளர்களிடம் இருந்து வருவாய் ஈட்டியதற்கான சான்றுகளை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளுமாறு தபால் துறை கேட்டுக் கொண்டுள்ளது. பணமோசடி மீதான பயங்கரவாத நிதியைத் தடுக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த விவகாரத்தில், பான் மற்றும் ஆதாருடன், முதலீட்டாளர்கள் வருமான ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்
அந்த சுற்றறிக்கையில், முதலீட்டாளர்களை 3 வகையாக தபால் துறை பிரித்துள்ளது. முதலீட்டாளர்கள் ரிஸ்க்கின் அடிப்படையில் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு முதலீட்டாளர் ஏதேனும் ஒரு திட்டத்தில் ரூ.50 ஆயிரத்தில் கணக்கைத் தொடங்கினால், அவருடைய அனைத்து தபால் அலுவலகத் திட்டங்களிலும் இருப்புத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருந்தால், அவர் குறைந்த ரிஸ்க் முதலீட்டாளராகக் கருதப்படுவார்.
அதிக ரிஸ்க் வகைகளில் கடுமையான விதிகள்
இதேபோல், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகையில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள் நடுத்தர ரிஸ்க் பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அனைத்து திட்டங்களின் இருப்புத்தொகை ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலும், அது நடுத்தர வகையிலேயே வைக்கப்படும். அதே நேரத்தில், தொகை ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அதிக ரிஸ்க் பிரிவில் கருதப்படுவார். மேலும் அவர்கள் மீது கடுமையான விதிகள் பொருந்தும்.
மேலும் படிக்க | Post Office RD Scheme: ரூ.100 போட்டால் போதும், அட்டகாசமான லாபம் காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ