8th Pay Commission: மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியினை வெளியிட்டு இருக்கிறது, அந்த நல்ல செய்தி என்னவென்றால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கிடுகிடுவென உயரப்போகிறது. தற்போது 7-வது ஊதியக்குழு செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், 8வது ஊதியக்குழுவை செயல்படுத்துவது பற்றி தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வருகின்றது. தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாட்டில் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், எட்டாவது ஊதியக் குழுவை நாடு முழுவதும் அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என்று ஊடகங்களில் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது. மோடி அரசு விரைவில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 8-வது ஊதியக் குழு நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படலாம் என்றும் சில யூகங்கள் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!
7-வது ஊதியக் குழு கடந்த 2013-ம் ஆண்டில் அமைக்கப்பட்டு, அதன்பின்னர் 2016-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது, 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரியளவில் உயர்வு ஏற்பட்டது. பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு 8-வது ஊதியக் குழுவை விரைவில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தேர்தலுக்கு முன்னதாகவே அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு பெரிய பரிசினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7-வது ஊதியக்குழுவின்படி, தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. வெளியாகியுள்ள செய்திகளின்படி, புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் கணிசமாக உயரும் மற்றும் ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 8-வது ஊதியக் குழு அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக மத்திய அரசுடன் விரைவில் பேச உள்ளதாக மத்திய ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காமல் அரசு நிராகரிக்குமானால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஓய்வூதியதாரர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும், அதற்கு தொழிற்சங்கம் ஆதரவளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரிக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 132.7 லிருந்து 133.3 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது தற்போதைய 42 சதவீதத்திலிருந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். எனினும், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் இனி வரவுள்ளன. அவை வந்த பிறாகே ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ