மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு

7th Pay Commission DA Hike News: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 16, 2024, 03:47 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.
  • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
  • 3% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு title=

7th Pay Commission DA Hike News: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துவிட்டது. தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட கொடுப்பனவை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) 3% அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் இரண்டும் 53% ஆக உயர்ந்துள்ளன. 

அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் சுமார் 1.15 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு

- ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.

- அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும்.

-  ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். 

அடிப்படை சம்பளம் 50,000 ரூபாய் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு 

- மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். 

- அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், இவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். 

- ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். 

இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

மேலும் படிக்க | பென்சன் பெறும் 60, 70, 75 வயது ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. வங்கி புதிய சலுகை!

டிஏ அரியர்

அகவிலைப்படி அதிகரிப்பு அக்டோபரில் அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையும் சேர்த்து வழங்கப்படும். 

இதற்கு முன்னர் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. 

அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

ஜனவரி மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் வந்த AICPI-IW குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, ஜூலை 2024 முதல் பணியாளர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

- ஜனவரியில், குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது. - இதற்குப் பிறகு, பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும், மே மாதத்தில் 139.9 புள்ளிகளாகவும் இருந்தது. 
- இந்த முறைப்படி, அகவிலைப்படி ஏப்ரல் மாதத்தில் 51.44 சதவீதம், 51.95 சதவீதம், 52.43 சதவீதம் மற்றும் மே மாதத்திற்குள் 52.91 சதவீதத்தை எட்டியது. 
- ஜூன் மாதத்தில் குறியீடு 141.4 புள்ளிகளாக இருந்த நிலையில், அகவிலைப்படியின் மதிப்பெண் 53.36 சதவீதமாக அதிகரித்தது.

7th Pay Commission DA Hike News

மேலும் படிக்க | EPF கணக்கில் ரூ.2 கோடி, ரூ.3 கோடி, ரூ.4 கோடி கார்ப்பஸ் பெற மாத முதலீடு எவ்வளவு தேவை? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News