சமையல் எரிவாயுவுக்கும் ரேஷன்! பொருளாதார நெருக்கடியில் சீரழியும் பாகிஸ்தான் மக்கள்

Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் எரிவாயு இருப்புக்கள் குறைந்துவிட்டதால் 24 மணிநேரமும் அதை வழங்க முடியாது என்ற செய்தி மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது. பணக்காரர்களுக்கான எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2023, 05:27 PM IST
  • பாகிஸ்தானில் எரிவாயு இருப்புக்கள் குறைந்தன
  • 24 மணிநேரமும் மக்களுக்கு எரிவாயு கிடைக்காது
  • பணக்காரர்களுக்கான எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது
சமையல் எரிவாயுவுக்கும் ரேஷன்! பொருளாதார நெருக்கடியில் சீரழியும் பாகிஸ்தான் மக்கள் title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியின் கோரப்பிடிகள் ஒவ்வொரு துறையாக பரவி வருகிறது. ஏற்கனவே உணவு பற்றாக்குறை தொடங்கி அனைத்து வகையிலும் இயல்பு வாழ்க்கை என்பது கானல் நீராகி விட்டது என்று பாகிஸ்தான் நாட்டு மக்கள் கவலையில் இருக்கும் நிலையில், அடுத்ததாக மற்றுமொரு பிரச்சனை மக்களின் வாழ்க்கை குலைக்க முன்வந்துவிட்டது. நாடு முழுவதும் 24x7 எரிவாயு விநியோகத்தை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்று பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் முசாதிக் மாலிக் கூறியதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

"எங்கள் நாட்டில் எரிவாயு இருப்புக்கள் குறைந்துவிட்டதால் 24 மணிநேரமும் அதை வழங்க முடியாது," என்று அவர் கூறினார், மேலும் ரம்ஜான் நோன்பு மாதத்தில் இதுபோன்ற முடிவை எடுப்பது மக்களுக்கு கடும் மன உளைச்சலை அதிகரித்துள்ளது.   

மக்கள் எதிர்நோக்கும் எரிவாயு விநியோகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக விரைவில் கராச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக முசாதிக் மாலிக் தெரிவித்தார். "பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் எரிவாயு கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுல்ளது. பணக்காரர்கள் இப்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டும்," என்று இணையமைச்சர்  முசாதிக் மாலிக் கூறினார்.

மேலும் படிக்க | மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், மக்களுக்கு தடையின்றி எரிவாயு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு முன்னதாக உத்தரவிட்டார், அதிகாரிகள் இந்த செயல்முறையை மேற்பார்வையிடுவார்கள் என்றும், இந்த விவகாரத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அறிக்கை கூறியது.

குறைந்த எரிவாயு விநியோகத்தின் மத்தியில் தொழில்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான விநியோகங்களை இடைநிறுத்துவதாக Sui Southern Gas Company (SSGC) கடந்த வாரம் அறிவித்த நிலையில் பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் முசாதிக் மாலிக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குழாய்களில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு விநியோகம் குறைந்ததால் குழாய்களில் எரிவாயு அளவு குறைந்துள்ளதாக SSGC தெரிவித்துள்ளது. SSGC இன் அறிக்கைக்கு பதிலளித்த கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை (KCCI) கராச்சியில் மக்கள் எதிர்கொள்ளும் எரிவாயு விநியோக பற்றாக்குறை குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம்.. அரபு நாடுகளிடம் கியாரண்டி கேட்கும் IMF!

எரிவாயு இல்லாமல், தொழிற்சாலைகள் செயல்பட முடியாது, உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று KCCI தெரிவித்துள்ளது.

"எவ்வளவு முரண்பாடுகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும், ஏற்றுமதியில் 54 சதவீதமும், வருவாயில் 68 சதவீதத்திற்கும் அதிகமாகவும் பங்களிக்கும் கராச்சியின் வணிக சமூகத்தின் மீது இத்தகைய அணுகுமுறை இருப்பது மிகவும் நியாயமற்றது" என்று கேசிசிஐ தலைவர் முஹம்மது தாரிக் யூசுப் கூறினார். .

இதற்கிடையில், அரசு நடத்தும் எக்ஸ்ப்ளோரர்களால் மொத்தமாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கான விலை நிர்ணய முறையை இந்தியா திருத்தி அமைத்துள்ளது. இந்தியாவின் மாதாந்திர சராசரி இறக்குமதி விலையில் 10% கச்சா எண்ணெய் ஒரு யூனிட்டுக்கு $4 மற்றும் உச்சவரம்பு $6.5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையால், சமையலறைகளுக்கு வழங்கப்படும் குழாய் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு (CNG) ஆகியவற்றின் விலை நாளை முதல் 11 சதவிகிதம் குறையும்.

மேலும் படிக்க | ஒரே ஆண்டில் 80% விலை உயர்வு! விலை நிர்ணயக் கொள்கையை மாற்றும் மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News