Indian Americans facing Racism: இனவெறி தாக்குதல்கள் என்று முடியுமோ என்ற கேள்வி அனைவரையும் அழுத்துகிறது. தொடரும் இனவெறி பாகுபாடு, உலகின் சாபக்கேடாக இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அமெரிக்கர்களின் இனவெறி தாக்குதல்களை அவ்வப்போது எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை ஒரு அமெரிக்க பெண் அவமதித்து இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இது உலக அளவில் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை இரவு (ஆகஸ் 24, 2022) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய மெக்சிகன்-அமெரிக்க பெண், அமெரிக்க வாழ் இந்தியர்களை தாக்கும் வீடியோ வைரலாகிறது.
டல்லாஸில் இந்திய-அமெரிக்க பெண்களின் குழுவை மெக்சிகன் பெண் ஒருவர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியர்களை குறிவைத்து நடத்தப்படும் இனவெறி தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரதமரின் கடமைகளை செய்யத் தேவையில்லை: தாய்லாந்து பிரதமரை சஸ்பெண்ட் செய்த நீதிமன்றம்
பிளானோவைச் சேர்ந்த எஸ்மரால்டா அப்டன் என்ற பெண், "உடல் காயத்தை ஏற்படுத்திய தாக்குதல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்" குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கார் நிறுத்தும் இடத்தில் பல இந்திய வம்சாவளி பெண்கள் இருக்கின்றனர். அவர்களிடம் எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் வந்து பேசுகிறார். ஏன் எங்களிடம் இப்படி பேசுகிறீர்கள் என்று இந்தியப் பெண்களில் ஒருவர் கேட்டதற்கு. "நான் உங்களை வெறுக்கிறேன் f****** இந்தியர்கள், அதனால்தான்... ஓ இந்த f****** என்று வெறுப்பு பேச்சை உமிழத் தொடங்கிவிட்டார்.
A racist woman in Texas harasses a group of Indian people just for having accents.
This behavior is absolutely repulsive. pic.twitter.com/ZvX3mdQ6Wm
— Fifty Shades of Whey (@davenewworld_2) August 25, 2022
இந்தியர்கள் ஏன் அமெரிக்காவிற்கு வருகிறார்கள்? ஏனென்றால் அவர்கள் சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். இந்தியாவில் சிறப்பான வாழ்க்கையை நடத்தவில்லை, அதனால்தான் இங்கு வருகிறீர்கள்" என்று அந்த பெண் பதிலளிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஒரு இந்திய வம்சாவளி பெண் பதிவு செய்தார்
வாதம் செய்த அஸ்மரால்டா அப்டன், "நான் ஒரு மெக்சிகன்-அமெரிக்கன். நான் இங்கு பிறந்தேன். நீங்கள் இங்கு பிறந்தீர்களா?" என்று கேட்டார். இந்தியர்களை ஏன் வெறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "நீங்கள் பேசும் விதத்தால்," என்று அவர் பதில் கூறினார்.
அதற்கு எதிர் கேள்வி கேட்கும் ஒரு இந்தியப் பெண், “ஆனால் நீங்கள் தான் எங்களிடம் வந்து பேசுகிறீர்கள்.. நான் என் ஃப்ரெண்ட்ஸோட இருக்கேன்” என்று கேட்கிறார். "நான் எங்கு சென்றாலும், இந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள்" என்று அதற்கு மெக்சிகோ அமெரிக்க பெண் பதிலளிக்கிறார்.
மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்
"இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டுக் கொண்டே, கேமராவைத் திருப்புங்கள், அதை நிறுத்துங்கள்," என்று அந்த பெண் கூறிவிட்டு, கைபேசியைப் பறிக்கும் முயற்சியில், ஒரு இந்திய-அமெரிக்க பெண்ணைத் தாக்கினார்.
தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது?
உள்ளூர் செய்திகளின்படி, உணவகம் ஒன்றின் பொது வாகன நிறுத்துமிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது, இந்திய-அமெரிக்கக் குழுவைச் சேர்ந்த பெண்களில் ஒருவர் 911க்கு டயல் செய்தார். டல்லாஸ் பார்க்வேயின் 3700 பிளாக்கில் உள்ள ஒரு உணவக வாகன நிறுத்துமிடத்திற்கு இரவு 8.15 மணியளவில் அதிகாரிகள் வந்தனர்.
29 ஆண்டுகள் அமெரிக்க வாழ்க்கை
தாக்குதலுக்கு ஆளான பெண்களில் ஒருவரான ராணி பானர்ஜி, 29 ஆண்டுகளாக டல்லாஸில் இருப்பதாகவும், ஆனால் தான் 'அவமானப்படுத்தப்பட்டதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும், உயிருக்கு பயந்ததாகவும்' உணர்ந்ததில்லை என்று எழுதினார்.
மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்!
"நண்பர்களுடனான இரவு உணவு ஒரு பயமுறுத்தும் அனுபவத்துடன் முடிந்தது. நாங்கள் எங்கள் கார்களை நோக்கிச் சென்றபோது, ஒரு கோபமான, குடிபோதையில் வந்த பெண் ஒருவர், வெறுக்கத்தக்க வார்த்தைகளில் அவதூறாக பேசினார். எங்கள் அருகே வந்து உடல் ரீதியாகவும் தாக்கினார். உடனே 911 ஐ அழைத்தோம், அதிர்ஷ்டவசமாக போலீசார் சில. நிமிடங்களில் வந்து விட்டனர்" என்று ராணி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த குழுவில் உள்ள பெண்களில் ஒருவரான இந்திராணி பானர்ஜி ஒரு பேஸ்புக் பதிவைப் பகிர்ந்துள்ளார்.'இந்த நடத்தைக்கு என்ன காரணம் என்று நிறைய பேர் கேட்கிறார்கள்' என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்த பெண் அப்படி மோசமாக நடந்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் சிலர் கேட்கிறார்கள் என்று பிதிஷா ருத்ரா ஆச்சரியப்படுகிறார்.
இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட பெண்கள் குழுவில் பிதிஷாவும் ஒருவர். அதற்கு பதிலளிக்கும் அவர், "ஒன்றுமில்லை', அவர் நடந்து செல்லும் போது நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம், அது இனவெறியைத் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவிக்க அவரை தூண்டியதா? எங்களுக்கு நேர்ந்த அவமானத்தை வீடியோவில் படம்பிடித்தோம். அதற்கு அவர் தாக்கினார். இது எங்களை மிகவும் பாதித்திருக்கிறது" என்று அவர் எழுதினார்.
மேலும் படிக்க | புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ