இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் உடனே இந்தியா தலையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
“இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப் போவதற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதை இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா?" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளா கோழிகோட்டில் நடக்கவிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு கமல்ஹாசன் கனத்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்து வெளிவந்தன. இதனையடுத்து கமலஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதைக்குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
சென்னை பள்ளிகரணையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்:-
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளங்கள் தூர்வாரப்படுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். திமுக-விற்கு புகழ் வந்துவிட கூடாது என்ற நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன.
ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவு சரியாகாக தான் இருக்கும் என்று நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன் என்றும் தெரிவித்தார். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு "பச்சை தமிழன்" என்று அறிவித்துக் கொண்டார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக ராஜ்ய சபை எம்பி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் உள்ள சிபிஐ அமைப்பும், வருமான வரித்துறையினரும் அரசியல் நோக்கத்தோடு யாரையும் அணுக கூடாது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தென்னூரில் உள்ள, பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார்.
அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியது:
அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டாலின் தனக்கே உரிய பாணியில் விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்.
இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பதவியில் இருந்த போது ஏன் உத்தரவிடவில்லை என்று மு.க.ஸ்டாலின் எழுப்பியிருந்த கேள்வி குறித்து பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது
ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்று பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது. சசிகலா பதவியேற்பு தேதி தொடர்பாக ஆளுநர் மற்றும் சசிகலா இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை நான் எதிர்க்கிறேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் பொன்னையன்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல முனைப் போட்டி இருந்தது. ஆனாலும் அதிமுக, திமுக என இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே முன்னிலை பெற்றன.
அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சர்பானந்த சோனோவால் இன்று மாலை பதவியேற்றார்.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் பி.பி.ஆச்சாரியா அவர்கள் சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.