பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பில். தனது அரசாங்கம் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் என்று கூறியிருந்தார்.
புதுடெல்லி: இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2021) கொண்டாடுகிறது. தில்லியில் உள்ள செங்கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் இந்தியாவும், உலக மக்கள் அனைவரின் நலனுக்கு பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று பிடன் கூறினார்.
சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்
மாசுக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பழைய வாகனங்களை சாலையில் இருந்து அகற்றுவதே Vehicle Scrappage Policy என்னும் கொள்கையின் முக்கிய நோக்கம். மேலும், இது பழைய வாகன உரிமையாளர்களுக்கும் தொழில்துறைக்கும் பயனளிக்கும்.
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகள் சுமார் 42 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற்றுள்ளதை அடுத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், தனது கணக்கை 'லாக்' செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா ஏழு பதக்கங்களை வென்றிருக்கிறது. ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு நாடெங்கிலும் பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை அவர்கள், கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப் பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) அமைச்சரவை நேற்று முன் தினம் விரிவாக்கப்பட்டது. பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனையில், 43 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.