புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டு, இந்தியாவுடனான உறவு 'முன்னெப்போதையும் விட முக்கியமானது' என்றார். ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜோ பிடன் பல தசாப்தங்களாக, நாற்பது லடசத்திற்கும் அதிகமான இந்திய-அமெரிக்கர்களின் துடிப்பான சமூகம் பங்களிப்பு உட்பட இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள், நீடித்து வலுவடைந்துள்ளன என்றார்.
இந்த நாளில், 1947 ஆகஸ்ட் 15, அன்று, மகாத்மா காந்தியின் சத்தியம் மற்றும் அகிம்சை வழிநடத்தப்பட்ட இந்தியா, சுதந்திரத்தை நோக்கிய தனது நீண்ட பயணத்தில் வெற்றி அடைந்தது. இன்று ஜனநாயகத்தின் மூலம் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற அடிப்படை உறுதிப்பாடு உலகை ஊக்குவிக்கிறது. மேலும், இது இரு நாடுகளுக்கிடையேயான சிறப்பான உறவின் அடிப்படையாகும் "என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
அவர் மேலும் இது குறித்து கூறுகையில், "கடந்த ஆண்டு, கோவிட் -19 தொற்றுநோயை சமாளிக்கும் வகையில் நாடுகள் புதிய வழிகளை கடைபிடிப்பதில் ஒன்றிணைந்துள்ளன, இதில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்படுவது-குவாட் மூலம்-பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கோவிட் -19 தடுப்பூசிகளின் உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்துவது, இந்தோ-பசிபிக் முழுவதும் மக்களுக்கு உதவ ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவை அடங்கும் " என்றார்.
"பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்து உள்ள இந்த தருணத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு எப்போதையும் விட முக்கியமானது" என்று அவர் கூறினார்.
ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
இரண்டு பெரிய மற்றும் மாறுபட்ட ஜனநாயகங்கள் உலகின் அனைத்து மக்களுக்காகவும் பணியாற்ற முடியும் என்பதை அமெரிக்காவும் இந்தியாவும் உலகிற்கு காட்ட வேண்டும் என்று ஜோ பைடன் கூறினார்.
"நம் தேசங்களுக்கிடையேயான நட்பு தொடர்ந்து மேம்படும். இன்று, இந்தியாவில், அமெரிக்காவில், மற்றும் உலகம் முழுவதும் கொண்டாடும் அனைவருக்கும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இந்திய சுதந்திர தினத்தை வாழ்த்துகிறேன்," என்று அவர் கூறினார்.
ALSO READ | 75வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR