குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்...
ஜூலை 16ஆம் தேதியன்று காணொலி மூலம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர், குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரின காட்சியகம், எந்திரவியல் காட்சியகம் மற்றும் இயற்கை பூங்காவையும் திறந்து வைத்தார். காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக வடகிழக்கு பகுதியின் தலைநகரங்களுக்கு முதன்முறையாக ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. புதிய அகல பாதை தடத்தை அமைத்ததன் மூலம் வாத் நகர்-மோதேரா-பதான் பாரம்பரிய பிரிவுக்கு தற்போது சிறப்பான ரயில் சேவை கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.
Also Read | 7th pay commission தொடர்பான புதிய செய்திகள்! LTA காலக்கெடு நீட்டிப்பு
இந்தியா போன்ற பெரிய நாட்டில் வசதி மற்றும் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை இந்திய ரயில்வே துறை கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கான்கிரீட் கட்டுமானம் மட்டுமல்லாமல் தனது சொந்த குணநலனுடன் கூடிய இயற்கையான உள்கட்டமைப்பை உருவாக்குவதே நாட்டின் லட்சியம் என்று குறிப்பிட்டார்.
அறிவியல் நகரத்தில் நிறுவப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். நமது நாட்டில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முன்னணி நீர்வாழ் உயிரினங்களின் காட்சியகமாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
எந்திரவியல் காட்சியகத்தில் ரோபோக்களுடன் உரையாடுவது மட்டுமல்லாமல் ரோபோடிக்ஸ் துறையில் நமது இளைஞர்கள் பணிபுரிவதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அவர்களது மனங்களில் விதைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காந்திநகர் ரயில் நிலையம் 71 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.