கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலால் பாதிக்கப்பட்டுள்ள செய்தித்தாள் தொழிலுக்கு உதவ நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமாறு கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் PR நடராஜன் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையில், ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பணமாகவும், ஊதியமாகவும் வழங்கி இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.
பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடன் 1 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் லாக் டவுன் சமயத்தில் ஒருவருக்கு பண நெருக்கடி இருந்தால், பிபிஎஃப் வைப்புத் தொகைக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது பல்வேறு மாநிலங்களுக்கு அல்லது தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்த CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், நிலுவையில் உள்ள வாரிய தேர்வுகளுக்கு தாம் இருக்கும் தேர்வு மையத்தில் இருந்து தேர்வு எழுதலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள் எனத்தகவல்
பூட்டுதல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.90,000 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து இருப்பதாக இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் (SCAI) தெரிவித்துள்ளது.
கொரோனா முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாக பேரழிவு ஏற்படும், மற்றொரு மருத்துவ நெருக்கடியை உருவாக்கும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
கொரோனா முழு அடைப்பால் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த உள்ளூர் விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும் சேவை துவங்கப்பட்ட முதல் நாளிலேயே நாடு முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
முழு அடைப்பின் போது மக்கள் தங்கள் வீட்டில் புதிது புதிதாக உணவு வகைகளை செய்ய முற்படுகின்றனர். ஆனால் பல்சுவை உணவு வகைகளை செய்ய தேவையான பொருட்களை வாங்க வெளியில் செல்லாமால் நாம் முடங்கியுள்ளோம்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக நிலவும் நிலைமை குறித்து ஆன்லைன் மாநாட்டை நடத்தியதுடன், மேலும் வழக்குகளை எதிர்பார்ப்பதாகவும், கோவிட் -19 க்கு எதிரான போராட்டம் கடுமையானதாக இருக்கும் என்றும் கூறினார்.
இஸ்ரேலில் இருந்து இரண்டு ஜெனரேட்டர்களை வாங்கியதில் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்களின் அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார். இதில் 36 லட்சம் புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வார்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பூட்டுதலுக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.