ஷிவ் நாடார் பல்கலைகழக மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 12,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள Crystal Meth அல்லது மெதாம்ஃபெடமைன் (Methamphetamine) எனும், சட்டென மனிதனை அடிமையாக்கும் மோசமான போதை மருந்தை, கேரளா வழியே இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்சித்த பாகிஸ்தான் நபர் கைது.
கோவை நீதிமன்றம் அருகே கடந்த மார்ச் 23ம் தேதி கணவரால் ஆசிட் வீசப்பட்டதால் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு.
உ.பி.யில் பயங்கரவாதத்திற்கு இணையான மாஃபியா என கூறப்படும் அதிக் அகமது கடந்த சனிக்கிழமை இரவு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, 3 ஆசாமிகளால் சுடப்பட்டு இறந்தான்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரயாக்ராஜில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் கொலை செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் CrPCயின் பிரிவு-144 அமல்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.