தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக பணம்கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த திட்டத்தை ஆதரிக்கும் விதமாக மத்திய பாஜக அமைச்சர்கள் சிலர் கூறியுள்ள விளக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதிர்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக துஷ்ட சக்திகளை ஏவிவிட்டுள்ளனர். அதனால் தான் பாஜக தலைவர்கள் மரணமடைந்து வருகின்றனர். இதை மகராஜ் எனக்கு சொல்லியிருக்கிறார் என போபாலின் பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா கூறியுள்ளார்.
இந்து மதத்தலைவர்களை கொலை செய்தும், தேவாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும் இந்தியாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்த இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.