கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள வங்காளதேச வணிக வங்கிக்கு பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து வங்கியின் மேலாளர் உள்பட 7 பேரை சுட்டுக்கொன்று விட்டு வங்கியில் இருந்து 12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர். தப்பி செல்லும் போது ஒரு திருடனை பிடித்து மக்கள் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் வங்காளதேசத்தை அதிர வைத்தது.
தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் தீவிரவாத இயக்கம் தான் இந்த சம்பவத்தை செய்தார்கள் என தெரியவந்தது.
ஆண்டுதோறும் வங்காளதேசத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை புயலுடன் கூடிய மழை பெய்வதுண்டு. இப்போது டாக்க மற்றும் பிற மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையினால் இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மோதியூர் ரஹ்மான் நிசாமி என்பவர் வங்கதேசத்தில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி தலைவர் ஆவர். 1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போர் வெடித்தது. அப்போது இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வங்கதேசம் நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மோதியூர் ரஹ்மான் நிசாமி வங்கதேச உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை 5-ந் தேதி அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனை அடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நேற்று நள்ளிரிவில் நிறைவேற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.