Top 10 Cars Sale In Januray 2024: இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் பொது போக்குவரத்து என்பது இன்றியமையாதது. மெட்ரோ, மின்சார ரயில், பேருந்துகள் என இவையெல்லாம் நகரமயமாக்கலில் முக்கிய கூறுகளாகிவிட்டன. அலுவலம் செல்லும் இளைஞர்கள் தொடங்கி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், தூரத்தில் இருக்கும் சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் நகரங்களை இணைப்பதில் பொது போக்குவரத்து மிகுந்த பயனளிக்கிறது.
இருப்பினும், கார் மற்றும் பைக் போன்ற தனிநபர்களுக்கான வாகனங்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்திய வாகனச் சந்தை என்பது தற்போது பரந்துபட்ட அளவில் வேர் பரப்பி இருக்கிறது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்கள் மட்டுமின்றி சூழலியலுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் வகை வாகனங்களுக்கு கூட இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இந்திய நடுத்தர வர்க்கம் தற்போது கார் வாங்குவதற்கும் அதிக விருப்பப்படுகிறார்கள்.
2024 ஜனவரியில் கார் விற்பனை விவரம்
கார் என்பது ஒரு பெரிய அந்தஸ்து, கௌரவத்தை தரும் என்பது இந்திய நடுத்தர வர்க்கத்தின் மாற்ற இயலாத எண்ணமாக இருந்தாலும், வீட்டில் பெரியவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, பணி சார்ந்து அடிக்கடி நீண்ட தூரம் பயணிப்பதற்கான தேவை போன்ற பல விஷயங்களும் கார் வாங்குவதில் அங்கும் வகிக்கின்றன. குறிப்பாக, கார் போன்ற சொத்துகளை வாங்கும் போது பலரும் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரத்தில் வாங்குவார்கள்.
மேலும் படிக்க | கார் வாங்க போகிறீர்களா? இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!
குறிப்பாக, பண்டிகை தினங்கள், செல்வச் செழிப்பை அதிகரிக்கும் என கூறப்படும் நாள்களில், மாதங்களில் எல்லாம் கார் விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில், இந்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் நடைபெற்ற கார் விற்பனை சார்ந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்களின் எந்தெந்த மாடல்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுசுகி
குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களையும், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களையும் இதில் ஓப்பிடு செய்யலாம். மாருதி சுசுகியின் Wagon R கார் கடந்தாண்டு ஜனவரியில் 20,466 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தில் இருந்தது. ஆனால், இம்முறை மாருதி சுசுகியின் Baleno கார் 19,630 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்தாண்டு Baleno 16,357 யூனிட்கள் விற்பனையாகி 3ஆம் இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டில் Wagon R 17,756 யூனிட்கள் விற்பனையாகி அந்த மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாடல்கள் மாறினாலும் மாருதி சுசுகி நிறுவனம்தான் இந்திய கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதனை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
விற்பனையும் அதிகம்
மாருதி சுசுகியின் கார்களான Dzire, Swift, Breeza, Ertiga ஆகியவை முறையே 5, 6, 7, 8ஆம் இடம் வரை ஆக்கிரமித்துள்ளன. அதாவது, டாப் 10 கார்களில் மாருதி சுசுகியின் 7 கார்கள் இடம்பெற்றிருப்பதன் மூலம் அதன் ஆதிக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். 10ஆவது இடத்தில் உள்ள Forx (Baleno வகை) கார் இந்தாண்டு 13,643 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
இந்தாண்டு Dzire 16,773 யூனிட்கள், Swift 15,370 யூனிட்கள், Breeza 15,303 யூனிட்கள், Ertiga 14,632 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டை பார்க்கும் போது, Dzire 11,317 யூனிட்களுடன் 7ஆவது இடத்தில் இருந்தது, தற்போது 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
Swift கடந்தாண்டு 16,440 யூனிட்கள் விற்பனையாகி 2ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு ஆறாம் இடத்திற்கு சரிந்துள்ளது. Breeza கடந்தாண்டு 14,359 யூனிட்களுடன் 5ஆவது இடத்தில் இருந்தது, இம்முறை 7ஆவது இடத்திற்கு சரிந்தது. Ertiga கடந்தாண்டு 9,750 யூனிட்களுடனே அதே 8ஆம் இடத்தில்தான் இருக்கிறது.
மற்ற மூன்று கார்கள்
டாப் 10 கார்களின் பட்டியலில் டாடா நிறுவனத்தின் இரண்டு கார்கள் இடம்பெற்றுள்ளனது. குறிப்பாக, டாடா நிறுவனத்தின் Punch கார் 17,978 யூனிட்களுடன் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்தாண்டு ஜனவரியில் 12,006 யூனிட்குடன் 6ஆவது இடத்தை பிடித்திருந்தது.
மற்றொரு டாடா காரான Nexon கடந்தாண்டு 15,567 யூனிட்களுடன் 4ஆம் இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 17,182 யூனிட்களுடன் அதே 4ஆம் இடத்தில் நீடிக்கிறது. கடந்தாண்டும், இந்தாண்டும் மகேந்திராவின் Scorpio கார் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 8,715 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்தாண்டு 14,293 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ