நவீன தீண்டாமை? ​ரசிகரை தொட மறுத்து மிஷ்கினை கட்டிப்பிடித்த நித்யா மேனன்!

Viral Video Of Nithya Menen : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர், சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் செய்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 9, 2025, 04:23 PM IST
  • ரசிகருக்கு கை கொடுக்க மறுத்த நித்யா மேனன்..
  • நவீன தீண்டாமையா?
  • வைரலாகும் வீடியோ!!
நவீன தீண்டாமை? ​ரசிகரை தொட மறுத்து மிஷ்கினை கட்டிப்பிடித்த நித்யா மேனன்! title=

Viral Video Of Nithya Menen : அதிகம் தமிழ் ரசிகர்களை பெற்ற மலையாள நடிகையாக விளங்குபவர், நித்யா மேனன். தமிழில் வெப்பம் படம் மூலம் பிரபலமான இவர், இப்போது தேசிய விருது பெற்ற நடிகையாக விளங்குகிறார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.

காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழா: 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.. இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். கூடவே, யோகி பாபு, வினய் ராய், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். காதல் கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், அனிருத், மிஷ்கின் உள்ளிட்ட சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மிஷ்கினுக்கு முத்தம்..!

காேலிவுட்டில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், மிஷ்கின். இவர், நித்யா மேனனை வைத்து சைகோ படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கிறார். இதையடுத்து, காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் ஆச்சரியத்தில் கத்திய நித்யா மேனன், “நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார். பின்பு, “Please Don’t squish me, நான் இப்போதான் மேக்-அப் போட்டுட்டு வந்தேன்” என்றார். அதன் பிறகு, மிஷ்கின் நித்யா மேனனுக்கு கையில் முத்தம் கொடுத்தார், நித்யா மேனன் பதிலுக்கு ஜெயம் ரவியை கட்டிப்பிடித்தார்.

நவீன தீண்டாமையா? 

நித்யா மேனன், மேடை ஏறிய பின்பு ஒருவர் மைக்கை சரி செய்தார். பின்பு அவருக்கு கை கொடுத்தார். ஆனால், பதிலுக்கு கை கொடுக்காத நித்யா மேனன், “உடம்பு சரியில்லை எனக்கு, அப்பறம் உங்களுக்கும் கோவிட் ஏதாச்சும் வந்துரும்” என்று கூறி சிரித்தார். இதற்கு முன்னர் நித்யா மேனனுக்கு மைக்கை சரி செய்து கொண்டிருந்த போதே, நடிகர் வினய் மேடை எறி வந்து நித்யா மேனனை கட்டிப்பிடித்தார். அதற்கு நித்யா மேனன் ஒன்றுமே சொல்லவில்லை.

இந்த வீடியோக்களை எடிட் செய்து இணையத்தில் பரவ விட்டு கொண்டிருக்கும் நெட்டிசன்கள், “பிரபலங்களை கட்டிப்பிடிக்கும் போது, முத்தம் கொடுக்கும் போதெல்லாம் பரவாத நோய், ரசிகருக்கு கை கொடுக்கும் பாேது மட்டும் பரவி விடுமா?” என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதில், இந்த காலத்து தலைமுறையினர் காதலை எப்படி பார்க்கின்றனர் என்பது குறித்தும், அதில் வரும் சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அதே போல, நடிகர் ஜெயம் ரவியும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் நடித்து வருகிறார். எனவே, இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இதில் நித்யா மேனன் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாவது போன்ற பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனவே, இது சில சர்ச்சைகளை கிளப்பலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘Don’t Touch’ ஆசையாக பேச வந்த ரசிகையின் செயலால் கோபமான ராதிகா..!

மேலும் படிக்க | நித்யா மேனனுக்கு பதிலா ‘இந்த’ நடிகைக்கு தேசிய விருது கொடுக்கலாம்! ரசிகர்கள் குமுறல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News