Similar Incidents Like Tirupati Stampede: திருப்பதியில், சொர்க்கவாசல் திறப்பு பொது தரிசன டோக்கன் வாங்கன நின்றவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதே போல 17 வருடங்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்துள்ளதை பலர் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
திருப்பதியில் நடந்த கோர சம்பவம்!
இந்தியாவின் தொன்மை மிகு ஆலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, திருப்பதி. இங்கிருக்கும் வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவின் எட்டு திக்கிலிருந்து பக்தர்கள் கூட்டம் வருவது இயல்பு. அதிலும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி மற்றும் பெருமாளுக்கு உகந்த சில மாதங்களில் கூட்டம் அலைமோதும்.
திருப்பதியில் 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது ஒட்டி, ஜனவரி 10-12 தேதிகளில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதில், பொது தரிசனத்தில் சொர்க்கவாசல் செல்ல இன்று காலை 5 மணி முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட இருந்தது. இதற்காக நேற்று காலை முதலே பல ஆயிரம் மக்கள் லைனில் நிற்க ஆரம்பித்தனர். மாலை கட்டுக்கடங்காமல் இருந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து, இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். சாமி தரிசனம் செய்வதற்காக, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் படுகாயம் அடைந்த சம்பவமும், 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவமும் பக்தர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது இப்படி இருக்க, இதற்கு முன்னர் ஏற்கனவே திருப்பதியில் இது போன்ற சம்பவம் ஒன்று 17 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன.
2008ஆம் ஆண்டு நடந்த சம்பவம்!
ஜனவரி 2ஆம் தேதி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒன்றுதான். அப்போதும் சொர்க்கவாசல் திறப்பிற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில்தான் சிலர் உயிரிழந்திருக்கின்றனர். அந்த ஆண்டு அலிபிரி இன்று இடத்தில் பொது தரிசனத்திற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இங்கு டோக்கன் வாங்க பலர் முண்டியடித்து சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இந்த சமூகத்திலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் ஏற்பட காரணம்?
திருவிழா நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலர், திருமலை நிர்வாகத்திடம் கூட்டத்தை சமாளிக்க சரியான வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
2015 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்:
இந்த சம்பவம் ஜூலை 26 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தவர்களுக்காக பிரசாதம் வழங்கப்பட்ட இடத்தில் நடந்தது. இதுவும் ஒரு திருவிழா நேரம் என்பதால், கூட்டம் அலைமோதியது. அனைவரும் பிரசாதம் வாங்குவதற்காக முண்டியடித்து முன்னேறி செல்ல, கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் மீறி களேபரமானது. இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவமும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் நடந்தேறியது. அப்போதும், பலர் திருப்பதி நிர்வாகம் கூட்ட நெரிசலை சமாளிக்க வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்
மேலும் படிக்க | திருப்பதி கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு நிவாரணம்! ஆந்திர அரசு அறிவிப்பு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ