Airtel Recharge Plans For T2O World Cup Fans: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி (இந்திய நேரப்படி) தொடங்கியது. தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர். அந்த குதூகலத்தை ஏர்டெல் தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது.
இப்போது டி20 உலகக் கோப்பையை நீங்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். அதே ஓடிடி தளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நீங்கள் இலவசமாக போட்டிகளை பார்க்கலாம். இலவசமாக பார்த்தாலும் ரசிகர்களுக்கு டேட்டா பிரச்னை என்பது தலைவலியை அளிக்கலாம். நீங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், 5ஜி ஸ்மார்ட்போனை வைத்திருக்கும்பட்சத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை இலவசமாக பெறுவீர்கள்.
ஆனால் அப்படி இல்லாமல் 4ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்களுக்கு அதிக டேட்டா தேவைப்படும் என்பதால் அதற்கான சில ரீசார்ஜ் பிளான்களையும் ஏர்டெல் தற்போது அறிவித்துள்ளது. கூடவே, நீங்கள் அமெரிக்காவுக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கும் போட்டியை காண செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கான ரோமிங் கட்டணங்களிலும் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டங்கள் அனைத்தும் டி20 உலகக் கோப்பையை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்களை மனதில் வைத்து பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட பிரீபெய்ட் பிளான்களாகும்.
மேலும் படிக்க | Airtel vs Jio: வருடாந்திர பிளான்கள் என்னென்ன இருக்கு...? எதில் நன்மைகள் அதிகம்...?
கிரிக்கெட் ரசிகர்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரூ.3,359 பிளான்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாள்களாகும். இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா என மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் அன்லிமிடெட் லோக்கல் கால் மற்றும் எஸ்டிடீ கிடைக்கும். இதில் ஓராண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கும். மேலும், ஏர்டெல் Xstream செயலி மூலம் பல ஓடிடிகள் கிடைக்கும்.
ரூ.869 பிளான்கள்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்களாகும். இதில் 2ஜிபி தினமும் டேட்டா கிடைக்கும். லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் வரம்பற்ற வகையில் உள்ளது. மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கிடைக்கும். சோனி லிவ், Airetel Xtream உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஓடிடிகள் இலவசமாகும்.
ரூ.499 பிளான்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாள்களாகும். இதில் 3ஜிபி தினமும் டேட்டா கிடைக்கும். லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் வரம்பற்ற வகையில் உள்ளது. மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கிடைக்கும். சோனி லிவ், Airetel Xtream உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஓடிடிகள் இலவசமாகும்.
மேலும் படிக்க | மொபைல் நம்பருடன் தவறான ஆதார் இணைத்திருந்தால் ஜெயில்! - தெரிந்து கொள்ளுங்கள்
கிரிக்கெட் ரசிகர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் ரூ.1499 திட்டம்: இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நான்கு எண்களில் 30ஜிபி ஆட்-ஆன் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் ஏர்டெல் Xtream Play பிளே சந்தா மற்றும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.1199 திட்டம்: இந்த திட்டமானது 150ஜிபி டேட்டா கிடைக்கும். மூன்று எண்களில் 30ஜிபி டேட்டா ஆட்-ஆன் கிடைக்கும். வரம்பற்ற ஏர்டெல் Xtream Play சந்தா மற்றும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.999 திட்டம்: இந்த திட்டத்தில் 100ஜிபி டேட்டா கிடைக்கும். மூன்று எண்களில் 30ஜிபி டேட்டா ஆட்-ஆன் கிடைக்கும். அன்லிமிடெட் ஏர்டெல் Xtream Play சந்தா மற்றும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.599 திட்டம்: இந்த திட்டத்தில் 75ஜிபி டேட்டா மற்றும் ஒரு எண்ணில் 30ஜிபி ஆட்-ஆன் டேட்டா வரும். மூன்று மாத ஏர்டெல் Xtream Play சந்தா மற்றும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.499 திட்டம்: இந்த திட்டத்தில் 75ஜிபி டேட்டா மற்றும் மூன்று மாத ஏர்டெல் Xtream Play சந்தா மற்றும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.399 திட்டம்: இந்த திட்டத்தில் மூன்று மாத ஏர்டெல் Xtream Play சந்தாவுடன் 40ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ