மார்ச் 16 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏன் அதிகரிக்கவில்லை? மீண்டும் உயரும் காலால் வரி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை அடுத்து, இந்தியாவில் இரண்டு எரிபொருட்களின் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்துவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2020, 03:50 PM IST
மார்ச் 16 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏன் அதிகரிக்கவில்லை? மீண்டும் உயரும் காலால் வரி title=

புது டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால், முக்கியமாக உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகளில் பங்கு சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளது. அதேநேரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் 17 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சரிந்தது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மார்ச் 16 முதல் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றன. மேலும் நாட்டிற்கான சராசரி கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுவும் 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் ப்ரெண்ட் திங்களன்று 6.62% ஆக குறைந்து ஒரு பீப்பாய் 23.28 டாலராக இருந்தது. அதே நேரத்தில் மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) 5% க்கும் குறைந்து ஒரு பீப்பாய் 20 டாலராக இருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை அடுத்து, இந்தியாவில் இரண்டு எரிபொருட்களின் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்துவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மார்ச் 14 அன்று அரசாங்கம் லிட்டருக்கு ரூ .3 உயர்த்தியது. கலால் வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிப்பது மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ .14,500 கோடி வருவாய் கிடைக்கிறது.

சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி கச்சா எண்ணெய் கொள்முதல் விலை வெள்ளிக்கிழமை பீப்பாய்க்கு 1,805.22 ரூபாயாகக் குறைந்தது, மார்ச் 16 அன்று ஒரு பீப்பாய் ரூ .2,272.08 ஆக இருந்தது. அதேநாளில் நிறுவனங்கள் அன்று தான் கடைசியாக விலைகளைக் குறைத்தன பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டருக்கு 16 பைசா மற்றும் ஒரு லிட்டருக்கு 15 பைசா குறைக்கப்பட்டது.

பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 16 பைசா மற்றும் டீசலுக்கு 15 பைசா குறைத்தது. டெல்லியில், தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ .69.59 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .62.29 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் பெட்ரோல் ரூ. 72.28 மற்றும் டீசல் ரூ. 65.71 என லிட்டர் என விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மீண்டும் அதிகரிப்பதை குறித்து நிதி அமைச்சகத்தால் எடுக்கப்படும்" என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது, ​​பெட்ரோல் மீதான மத்திய வரி லிட்டருக்கு ரூ .22.98 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 18.83 ஆகவும் விதிக்கப்பட்டு உள்ளது.

Trending News