அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்: அரசின் அடுத்த மாஸ்டர் பிளான்

Pension for Platform Workers: சாலையோரத் தொழிலாளரகள் போன்ற  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.  இந்த திட்டம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2025, 05:14 PM IST
  • சாலையோர தொழிலாளர்களுக்கு முக்கிய செய்தி.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு.
  • முழு விவரத்தை இங்கே காணலாம்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்: அரசின் அடுத்த மாஸ்டர் பிளான் title=

Pension for Platform Workers: சாலையோர தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. சாலையோரத் தொழிலாளரகள் போன்ற  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதோடு, அவர்களை சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. சாலையோர தொழிலாளர்களுக்கு வரக்கூடிய முக்கிய திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

இந்த திட்டம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும் என கூறப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 மில்லியன் சாலையோரத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 நிதியாண்டில் இது தொடங்கப்படலாம் என்று இபிஎஃப்ஓ அதிகாரிகள் கூறுகின்றனர். 

தொழிலாளர் ஓய்வூதிய நிதிக்கு எப்படி பங்களிக்கப்படும் என்பதற்கான வழிமுறை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், தொழிலாளர்களின் தினசரி வருவாயில் சுமார் 2% அந்த நிதியில் சேர்க்கப்படும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. முதலாளியும் நிர்ணயிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் (வருவாயில் 2%) ஓய்வூதிய நிதிக்கு இந்தப் பங்களிப்பைச் செய்வார் என்று ஒரு அதிகாரி கூறினார்.

சாலையோரத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முதலாளிகளுடன் பணிபுரிவதால், அனைத்து முதலாளிகளும் ஒரே சூத்திரத்தின் அடிப்படையில் நிதிக்கு பங்களிக்கச் சொல்லப்படுவார்கள். சாலையோரத் தொழிலாளிக்கு EPFO ​​ஒற்றை யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) வழங்கும். இது தொழிலாளிகளின் அனைத்து முதலாளிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும். இதன் காரணமாக அனத்து முதலாளிகளின் பங்களிப்பும் ஒரே ஓய்வூதிய நிதிக்கு செல்லும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொழிலாளிகள் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைக்கு மாற முடிவு செய்தால், இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள சமூகப் பாதுகாப்புக் கணக்கு EPFO ​​இன் கீழ் உள்ள அவரது கணக்குடன் இணைக்கப்படும்.

இந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து கிக் தொழிலாளர்களும் தொழிலாளர் அமைச்சகத்தின் e-Shram போர்ட்டலில் பதிவு செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு UAN எண் அளிக்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் அவர்களுக்கு PM-JAY எனப்படும் பிஎம் ஜன் ஆரோக்யா திட்டத்தின் (PM Jan Arogya Yojana) மூலம் சுகாதார காப்பீடு கிடைக்கும்.

ஏற்கனவே, e-Shram போர்டலில் தொழிலாளர்களைப் பதிவு செய்வதற்கான ஒரு முன்னோடி முயற்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல் தளங்கள் தங்கள் தொழிலாளர்களை போர்ட்டலில் பதிவு செய்ய உதவும் ஒரு ஒருங்கிணைப்பு தொகுதி சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை தொழிலாளர் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.

GIG Workers

2020-21 ஆம் ஆண்டில் நாட்டில் சுமார் 7.7 மில்லியன் கிக் தொழிலாளர்கள் இருப்பதாக நிதி ஆயோக் மதிப்பிட்டிருந்தது. எனினும், அவர்களின் எண்ணிக்கை இப்போது 10 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. 2030 வாக்கில், மொத்த கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23.5 மில்லியனாக உயர வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க | EPFO ELI Scheme: காலக்கெடு நீட்டிப்பு.... திட்டத்தின் பலன்களை பெற இதை செய்துவிடுங்கள்

மேலும் படிக்க | Income Tax Act: பண பரிவர்த்தனை விதிகள்... வரம்பை மீறினால் 100% அபராதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News