யூனியன் பட்ஜெட்: தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் -ஓபிஎஸ் கருத்து

பட்ஜெட் தொடர்பான செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

Last Updated : Jan 31, 2018, 09:06 PM IST
  • நடுத்தர மக்கள் பயனடைய வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுமா?
  • கடந்த ஆண்டில் அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடைபெற்றுது பட்ஜெட் எதிரொலிக்குமா?
  • நிதியமைச்சர் அருண் ஜெட்லி 5-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
யூனியன் பட்ஜெட்: தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் -ஓபிஎஸ் கருத்து title=

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி திட்டங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதால் பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பொருளாதாரத்தை மையமாக திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுமா? கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரியில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா? ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் எந்த மாதிரியான பட்ஜெட் அறிவிக்கப்படும் போன்ற மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

யூனியன் பட்ஜெட் 2018: பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்ன? ஒரு பார்வை!!

அதே சமயத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு கடைசி பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்ய முடியும்.

தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 5-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யூனியன் பட்ஜெட் 2018: பட்ஜெட் குறித்து சில முக்கிய குறிப்புகள்

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் கேட்ட பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியது, நாளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யப்படவுள்ள யூனியன் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

Trending News