Ayushman Bharat Yojana | ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா (PMJAY) தகுதியுள்ள நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதாரப் பலன்களை வழங்குகிறது. உங்கள் தகுதியைச் சரிபார்ப்பது விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெறிந்து கொள்ளுங்கள்,
Ayushman Bharat Yojana | ஆயுஷ்மான் பாரத் யோஜனா (ABY) மத்திய அரசின் காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருக்கும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில் தகுதியுள்ள பயனாளிகள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பெற முடியும்.
ஒருவேளை நீங்கள் இந்த இன்சூரன்ஸ் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் pmjay.gov.in என்ற தளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆஃப்லைன் என்றால் அருகில் இருக்கும் பொது சேவை மையத்தில் (CSC) விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் தகுதி மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆயுஷ்மான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது? | தகுதியுள்ள நபர்கள் ஆயுஷ்மான் கார்டுக்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான pmjay.gov.in என்ற தளத்துக்கு செல்லவும். லாகின் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும். உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ஒப்புதலுக்காக காத்திருக்கவும். அங்கீகரிக்கப்பட்டவுடன், உங்கள் ஆயுஷ்மான் அட்டையை இந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கவும்.
ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறை | உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்துக்கு (CSC) செல்லவும். சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்தித்து தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். அதிகாரி உங்கள் தகுதி மற்றும் ஆவணங்களைச் சரிபார்ப்பார். இது முடிந்தவுடன் உங்கள் ஆயுஷ்மான் அட்டை ஒப்புதல் கொடுக்கப்படும். பின்னர் நீங்கள் அதை டவுன்லோடு செய்யலாம்.
ஆயுஷ்மான் அட்டைக்கான உங்கள் தகுதியை எவ்வாறு சரிபார்க்கலாம்? | அதிகாரப்பூர்வ போர்ட்டல் pmjay.gov.in க்குச் செல்லவும். 'Am I Eligible' ஆப்சனை கிளிக் செய்யவும். OTP பெற உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும். OTP ஐ உள்ளிட்டு கேப்ட்சா சரிபார்ப்பை முடிக்கவும். உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணத்தைத் தேர்வு செய்யவும். ஆவண விவரங்களை உள்ளிடவும். ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கு நீங்கள் தகுதியுடையவரா என்பது காண்பிக்கப்படும்.
ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிப்பது, பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்கிறது, தகுதியுள்ள பயனாளிகளுக்கு சுகாதாரச் செலவுகளைக் குறைக்கிறது. நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்கள் தகுதியைச் சரிபார்த்து, இன்றே செயல்முறையை முடிக்கவும்!