திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த நிலையில் இதுவரை இது குறித்து தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, இந்த நிலையில் இது குறித்து வரும் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழக பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா, வரும் ஜூன்3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளன்று அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
பெண்களுக்கு உரிமை தொகை?
திராவிட இயக்கம் துவங்கியதில் இருந்து பெண்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, பெண்களின் உரிமைக்கான போராட்டம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டது, இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உரிமை தொகை மாதம் ₹1,000 வழங்கப்படும் என புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அமல்படுத்தி வரும் நிலையில், இல்லதரசிகளுக்கு மாதம் ₹1,000 உரிமை தொகை வழங்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு இல்லதரசிகளில் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | இரட்டை வேடம் போடும் திமுக : ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு
அறிவிப்பு நடைமுறைக்கு வருமா?
திமுக அரசு பொறுப்பேற்ற பின் கொரானா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹4,000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது, அதே போல் பெட்ரோல் மீதான வரி ₹3 குறைக்கப்பட்டது, ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தகுதிவாய்ந்த குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார், இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார், அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் பயன்பெறும் நோக்கில் கூட்டுகுடும்பத்தில் அட்டை வைத்து இருந்த பெண்கள் பலரும் தனிநபர் ஸ்மார்ட் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர் இதனால் அதிகாரிகள் விழி பிதுங்கி உயர் அதிகாரிகள் உத்தரவிற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பல்வேறு நாட்களாக பொருட்கள் வாங்காத கார்டுகள், இரண்டு முகவரிகள் மூலம் அட்டை வைத்து உள்ளவர்களை கண்டறிந்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | முக அழகிரியை அரவணைத்த அமைச்சர்கள்... திருமணத்தில் இடம்பெற்ற பாசமழை காட்சிகள்..!
தமிழகம் முழுவதும் 2 கோடியே 2 லட்சம் கார்டுகள் உள்ளது, இதில் 50,000 உயர் வருவாய் பிரிவினர், இதில் 2 கோடி கார்டுகளுக்கு என்று பார்த்தால் மாதம் ₹1000 வீதம் 12,000 ரூபாய் செலவாகும், இதற்கு அரசிற்கு ₹24,000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும், தமிழக அரசின் பட்ஜெட் 3 லட்சம் கோடி இதில் ஜிடிபி 20லட்சம் கோடி ரூபாய், கிட்டதட்ட 24,000 கோடி என்பது 1சதவீதம், ஆனால் பட்ஜெட்டின் படி பார்த்தால் 8 சதவீதம் தொகை வருகிறது, ஆனால் தமிழக நிதி நிலைமை இருக்கும் நிலையில் அரசு பெண்கள் உரிமை தொகை அறிவிப்பை தற்போது வெளியிடுமா என்பது தெரியவில்லை.
எட்டும் கனியாகுமா அறிவிப்பு?
வரும் வெள்ளிகிழமை திமுக அரசின் முழு முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது, இதில் பெண்கள் உரிமை தொகை அறிவிப்பு வெளியாகும் என பெண்கள் எதிர்பார்க்கும் நிலையில் தமிழக நிதி நிலைமை இதற்கு ஒத்துழைக்குமா என்பது குறித்து அரசு பட்ஜெட் மீதான விவாதத்தில் விளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,
மகனையோ அல்லது கணவரையை இழந்த பெண்கள் சுயமாக தங்கள் வாழ்வாதரத்தை நிலைநிறுத்தி கொள்ள இலவச தொகையாக இல்லாமல் உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது காலம் தாழ்ந்தாமல் அரசு அறிவிக்க வேண்டும் என்பதே இல்லதரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR