Saturn Transit 2025: மீனத்தில் 2025 மார்ச் மாதத்தில் ஒரு அரிய நிகழ்வு நடக்க உள்ளது. மீனத்தில் 6 கிரகங்கள் ஒன்று சேர இருக்கின்றன. இது பல சுப, அசுப யோகங்களை உருவாக்கும். இவற்றில் மிக முக்கிய நிகழ்வாக சனி பெயர்ச்சியும் இருக்கும்.
ஜோதிடத்தில், கிரக பெயர்ச்சிகளால், ஏற்படும் கிரகங்களின் இணைவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில், மார்ச் மாதம் ஏற்பட உள்ள கிரக சேர்க்கைகள், மகரம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களைத் தரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி பெயர்ச்சி 2025: மார்ச் மாதம் ஜோதிடத்தின் மிக முக்கிய நிகழ்வான சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஏற்கனவே மார்ச் மாதம் மீனத்தில் ராகுவும் சுக்கிரனும் இருக்கும் நிலையில், மார்ச் 29ம் தேதி சனியும் இந்த ராசிக்குள் நுழைகிறார்.
மீன ராசியில் 6 கிரகங்கள்: பிப்ரவரி மாதம் மீன ராசியில் புதன் சஞ்சரிப்பார். மார்ச் 14 முதல் சூரியனும் மீன ராசியில் இருப்பார். மார்ச் 28 அன்று சந்திரனும் மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த வகையில் மார்ச் 29ம் தேதி மீன ராசியில் 6 கிரகங்கள் இணைகின்றன. மார்ச் மாதம் ஏற்பட உள்ள கிரக சேர்க்கைகள், மகரம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்களைக் கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ரிஷபம்: மீனத்தில் 6 கிரகங்களின் இணைவது, ரிஷப ராசிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டுவரும். எதிர்பாராத சில சவால்கள் இருந்தபோதிலும் நீங்கள் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது வியக்கத்தக்க பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் நிதி விஷயங்களில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்: மீனத்தில் 6 கிரகங்களின் இணைவது, மிதுன ராசிக்காரர்களுக்கு, எதிர்பாராத வாய்ப்புகளையும் தரும். இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடன் உங்கள் இணக்கம் முன்பை விட சிறப்பாக இருக்கும். நேர்மையான செயல், உங்கள் வெற்றிக்கு முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அமைதியாக சிந்தித்து, நல்ல முடிவெடுப்பதன் மூலம் உங்கள் சிரமங்களை வாய்ப்புகளாக மாற்றலாம்.
கன்னி: மீனத்தில் 6 கிரகங்களின் இணைவது, கன்னி ராசியினருக்கு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டு வரும். கடுமையான போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இதனால், வாழ்க்கையில் சாதனைகள் படைக்கலாம். புதிய திறன்களைக் கற்று, அவற்றை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்யுங்கள் புதிதாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இந்த காலம் இதற்கு சிறந்ததாக இருக்கும்.
மகரம்: மீனத்தில் 6 கிரகங்களின் இணைவது, மகர ராசிக்காரர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். புதிய தொழில் முயற்சிகளுக்கு அடித்தளம் அமைக்க இதுவே சிறந்த நேரம். முயற்சிகளுக்கு நல பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையில், தொழிலில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். எனினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்தித்து எடுக்க வேண்டும்.
கும்பம்: மீனத்தில் 6 கிரகங்களின் இணைவது, கும்ப ராசியினருக்கு, வாழ்க்கையில் புதிய பாதைகளைக் காட்டலாம். ஏழரை சனி பாதிப்பில் இருந்து விடுபட்டு, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அமைதி நிறைந்திருக்கும். வெற்றிகள் கை கூடும். வாழ்க்கை மன அழுத்தம் இல்லாததாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மற்றம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.