சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலக தமிழர் நாள் விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தமிழ்நாட்டு கல்விக்கொள்கை குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.
திமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, ஆண்டுதோறும் ஜனவரி 12 ஆம் நாள் அயலக தமிழர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் நாள் விழாவில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர், சிபிஎஸ்இ பாடதிட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | Pongal Nalla Neram 2024 : பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் - முழுவிவரம்
அதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசுக்கு என தனி கல்விக்கொள்கை இருப்பதாக சுட்டிக்காட்டினார். அவர், "தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் தழைத்தோங்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
அமைச்சர் பதில் அளித்துக்கொண்டிருக்கும் போதே கேள்வி எழுப்பிய நபரை வெளியேற்றும் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்த நபர், தம்மை வெளியேற்றுவது ஜனநாயக முறையில்லை என்றும், தமது பெயரும் கருணாநிதிதான் என்றும் கூறினார். பின்னர் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கேள்வி எழுப்பிய நபர் எந்த நாட்டில் வசிக்கிறார் என கேட்டார். அதற்கு அந்த நபர் சரியான பதிலை சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கேள்வி எழுப்பியவர் அமெரிக்காவின் சிகாகோவில் வசிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாம் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்ததாகவும், பிரெஞ்சு மொழியும் கற்றுக்கொண்டதாக கூறினார். மேலும் தனது குழந்தைகளும் பிரெஞ்சு படித்ததாக கூறிய அவர், தமிழ்நாட்டில் யாரையும் எந்த மொழியையும் கற்கவேண்டாம் என தடுக்கவில்லை என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொதுவெளியில் பேசியதை பலரும் வரவேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் மாநில நலன்களை பாதுகாக்கும் வகையில் அரசியல் களத்திலும், நிர்வாகத்திலும் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை திமுக கொடுக்க வேண்டும் என்றும் அரசியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | Pongal: ரயில் டிக்கெட் புக் பண்ண வேண்டாம்..! ஹேப்பியா ஊருக்கு போய்டு சென்னை வாங்க.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ