ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்கள் யார் யார்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்க உள்ளது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். 

 

1 /8

முன்னாள் இலங்கை வீரர் மகேல ஜெயவர்த்தனே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்து இப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளார். அவர் 15 கேட்ச்களை பிடித்துள்ளார். 

2 /8

முன்னாள் நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 12 கேட்ச்களை பிடித்துள்ளார். 

3 /8

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 12 கேட்ச்களை பிடித்துள்ளார். 

4 /8

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ சாம்பியன்ஸ் டிராபில் 12 கேட்ச்களை பிடித்துள்ளார். 

5 /8

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் - ரவுண்டரான ஜேபி டுமினி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 9 கேட்ச்களை பிடித்து 5வது இடத்தில் உள்ளார். 

6 /8

நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 9 கேட்ச்களை பிடித்துள்ளார். 

7 /8

பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 9 கேட்ச்களை பிடித்துள்ளார். 

8 /8

முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரைனா சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 8 கேட்ச்களை பிடித்துள்ளார்.