TN School Students Summer Holidays 2024 : தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை காலமும் தொடங்கிவிட்டது. 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கப்பட்டு, மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப். 8ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி அன்று வெளியாகும். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி அன்றும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி அன்றும் வெளியாகிறது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தேர்வு தேதிகளின்போது ரம்ஜான் விடுமுறையும் வருகிறது.
இந்த வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்தன...
அதை தொடர்ந்து ஏப். 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. எனவே, தேர்வுகள் நடைபெறுமா அல்லது அந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற குழப்பம் பெற்றோரிடமும், மாணவர்களிடம் இருந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், 'ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்றுடன் (ஏப். 5) முழு ஆண்டுத் தேர்வு முடிவடைகிறது. ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப். 6) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள்
நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஏப். 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக வரும் ஏப். 12ஆம் தேதிவரை சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணியினை ஆசியர்கள் மேற்கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்
அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு ஏப். 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை உள்ள காரணத்தினால் 4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மீண்டும் ஏப். 22 மற்றும் ஏப். 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வுகள் எழுதுவார்கள்.
ஆசிரியர்களை பொருத்தவரை வரும் ஏப். 25ஆம் தேதிவரை அவர்களுக்கு வேலை நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்றபோது அது On Duty ஆக கருதப்படும். தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகைபுரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி, promotion பதிவேட்டில் பதிவு கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற மேற்கொள்ளலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ